"நல்லாட்சிக்கு 1 வயசு" மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்கிறார் மைத்திரி
மக்களுக்குத் தேவையான சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாத்து நாட்டின் நல்லாட்சி மற்றும் அரசுக்குள் இருக்கவேண்டிய வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை நிலைநாட்டி, ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழித்து, நாடு என்ற ரீதியில் பயணிக்கவேண்டிய நீண்ட பயணத்திற்கான ஆரம்பத்தை இந்த ஒரு வருட ஆட்சியில் நாம் செய்துமுடித்தோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஓராண்டுக்குள் நிறைவேற்றப்பட்டவைகள் தொடர்பாக திருப்தியடைய முடியுமா என்று சிலர் என்னிடம் கேட்கின்றனர். அதுகுறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என நேரடியாகக் கூறமுடியும்.
கடந்த ஓராண்டுக்குள் அரசால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நாளாந்த வாழ்க்கையில் பெரும்பாலும் உணரமுடியாது. அது மக்களின் வயிராலும், உடலாலும் உணரப்படுவதல்ல. மக்களுக்குத் தேவையான சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்து நீண்ட பயணத்திற்கான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளோம்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பல்வேறு மதங்களைப் பின்பற்றும், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மத்தியிலும் இன்று நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும். நாட்டில் வேற்றுமையை விளைப்பதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றுபடுவதா என்பது பற்றி இன்று அனைவரும் தம் மனங்களைத் தொட்டுக் கேள்வி எழுப்பவேண்டும்.
புதிய அரசு பதவியேற்று ஓராண்டிற்குள் நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் ஆட்டம்கொள்ளவில்லை என்பதுடன், நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பொருளாதார முறைமைகளில் காணப்பட்ட குறைபாடுகளே அதற்கான காரணமாகும். அரசியல் மேடைகளில் தெரிவிக்கப்படும் விமர்சனங்கள், விளக்கங்கள் மற்றும் வரைவிலக்கணங்கள் எதுவாக இருந்தாலும் நாட்டைச் சரியான வழியில் இட்டுச்சென்று அபிவிருத்திப் பாதையை நோக்கித்தான் வழிநடத்துகின்றேன்.
இந்த ஒரு வருடத்துக்குள் பொருளாதாரம் பாதிப்படையவில்லை. நீண்டகாலமாக பொருளாதார முறைமையில் இருந்த தவறுகளாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது' - என்றார்.
Yes we can agree with this President statement. They did do physical development. But they did software part development which was expected peoples. It is very essential to the sustainable development and peace.Go ahead
ReplyDelete