Header Ads



பயங்கரமான புதிய மரபணு 19 நாடுகளில் பரவியுள்ளது விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

மிகவும் ஆபத்தான, வேகமாக பரவக்கூடிய புதிய வகை சூப்பர்பக் மரபணு 19 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கைவை சேர்ந்த இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில் எம்.சி.ஆர்.-1 எனப்படும் சூப்பர்பக் மரபணு கனடா, சீனா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகள் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்ணை விலங்குகள், மாமிசம் மற்றும் மனிதர்களிடம் இந்த மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எம்.சி.ஆர்.-1 என அழைக்கப்படும் இந்த சூப்பர்பக் மரபணுவானது முதன் முதலாக கடந்த 2012-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. 

இந்த மரபணுவானது பாக்டீரியா கிருமியை நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளுக்கு கட்டுப்படாதவையாக மற்றிவிடும். தற்போது பயன்பாட்டில் உள்ள கோலிஸ்டின் என்ற ஆண்டிபயாடிக் மருந்துக்கு மட்டுமே இந்த கிருமியை அழிக்கும் திறன் உள்ளது. ஆனால் கோலிஸ்டின் உட்கொண்டால் மிக மோசமான பக்கவிளைகளை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவர்கள் இந்த மருந்தை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே பரிந்துரை செய்கிறார்கள். 

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டிபயாடிக் மருந்துக்கு கட்டுப்படாத கிருமிகளின் தாக்குதளுக்கு 2 மில்லியன் பேர் ஆளாகிறார்கள். இவர்களில் 23 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இந்நிலையில் புதிய சூப்பர்பக் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களிடன் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இது போன்ற ஆபத்தான மரபணுகள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் உணவுக்காக வளக்கப்படும் விலங்குகள் மற்றும் பறவை இனங்களுக்கு கொடுக்கப்படும் அதிகப்படியான ஆண்டிபயாடிக் மருந்துகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. இறைவன் இயற்றி உள்ள இயற்கைச் சட்ட ஒழுங்குகளை மீறினால் இதுதான் நடக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.