Header Ads



18 மணி நேர பயண சாதனைக்கு, தயாராகும் கத்தார் ஏர்லைன்ஸ்


சில மணி நேரத்திற்குள் நாடு விட்டு நாடு செல்வதற்குத்தான் விமானப் பயணம் என்றாலும், அப்படிச் செல்வதற்கு பல மணி நேரத்திற்கும் மேல் பிடிக்கும் தொலை தூர விமானப் பயணங்களும் இருக்கின்றன. அந்த வகையில், 8,578 மைல் தூரத்தை 16 மணி நேரம் 55 நிமிடங்களில் கடக்கும் டல்லாஸ் - சிட்னி செல்லும் க்வாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவையே இதுவரை தொலைதூரப் பயணத்தின் ராஜாவாக இருந்தது.

இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இருந்து நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்துக்கு நேரடி விமான போக்குவரத்து சேவை துவங்க கத்தார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விமான சேவையின் பயண நேரம் சுமார் 18 மணி நேரமாக இருக்கும். இதுவே உலகின் நீண்ட நேர விமான சேவையாகும். 259 பயணிகளுடன் போயிங் 777-LR ரக ஜம்போ விமானத்தின் மூலம் இந்த சேவையை தொடங்க கத்தார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.

தோஹா- ஆக்லாந்து இடையே விமான சேவை துவக்கப்பட்டால் அந்த விமானம் 9,034 மைல் தூரத்தை 18 மணி நேரம் 34 நிமிடங்களில் கடக்கும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இது ஒரு சாதனை பயணமாக இருக்கும் என கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.