18 பிள்ளைகளை பெற்ற பிரித்தானிய பெண், 19 ஆவது முறையாக கர்ப்பம்’
பிரித்தானிய நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் 18 பிள்ளைகளை பெற்றுள்ள தாயார் ஒருவர் தற்போது 19-வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் உள்ள Morecambe என்ற நகரில் Noel Radford (45) மற்றும் Sue (40) என்ற தம்பதி இருவர் வசித்து வருகின்றனர்.
சூவிற்கு 13 வயது இருந்தபோதே திருமணம் நடந்துள்ளது. முதலில் 3 குழந்தைகளை மட்டும் பெற்றுக்கொண்டு வளமான வாழ்க்கையை தொடர வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், முதலில் 3 குழந்தைகள் பிறந்து அவர்கள் அனைவரும் வீட்டை எப்போதும் உற்சாகமாக வைத்திருப்பதை பார்த்து மேலும் பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் எண்ணியுள்ளனர்.
இதன் விளைவாக, அடுத்த வருடங்களாக தாயாரான சூ பிள்ளைகளை பெற்றுக்கொண்டு 18 என்ற எண்ணிக்கையை அடைந்தவுடன், ‘இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்’ என பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பிரித்தானிய நாட்டில் உள்ள குடும்பங்களிலேயே அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பெற்று இருப்பது சூவின் குடும்பம் தான்.
இந்நிலையில், கடந்த வாரம் மருத்துவமனையில் சோதனை செய்தபோது, சூ 19-வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என தீர்மானித்த இருவரும், ஒரு சூழலில் தங்களுடையை பிள்ளைகளிடம் கூற, அவர்கள் அப்பகுதி முழுக்க பரப்பியுள்ளனர்.
இனியும் இந்த செய்தியை மறைக்க கூடாது என எண்ணியை அவர்கள் தங்களுடைய சொந்த இணையத்தளத்தில் ‘சூ கர்ப்பமாக இருக்கிறார் என்றும், எதிர்வரும் யூலை மாதம் 19-வது குழந்தை பிறக்கும்’ என உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.
தற்போது 18 பிள்ளைகள் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், இவர்கள் அனைவரையும் பராமரிக்க அரசிடமிருந்து கூடுதலாக அவர்கள் எந்த உதவியையும் கோரவில்லை.
ஏனெனில், இதே நகரில் பேக்கரி நிறுவனம் ஒன்று வைத்திருப்பதால், அதிலிருந்து வரும் வருமானம் போதுமானதாகவே உள்ளது.
18 பிள்ளைகளையும் பராமரிக்க ஆண்டுக்கு சுமார் 30,000 பவுண்டுகள் செலவாகிறது. ஒரு பிள்ளைக்கு பிறந்த நாள் செலவாக 100 பவுண்டும், கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்திற்கு ஒரு பிள்ளைக்கு 100 முதல் 250 பவுண்ட் வரை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment