ஈரானுக்கு அமெரிக்கா அளித்த 170 கோடி டாலர்
அண்மையில் ஈரானுக்கு அமெரிக்கா அளித்த 170 கோடி டாலர் (சுமார் இந்திய ரூ.11,400 கோடி), கைதிகள் பரிமாற்றத்துக்காக அளிக்கப்பட்ட லஞ்சம் என அமெரிக்கக் குடியரசுக் கட்சியினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ஈரானில் 1979-ஆம் ஆண்டு புரட்சி வெடிப்பதற்கு முன்னர் ஆட்சி புரிந்த ஷா பேரரசர், ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்காக அமெரிக்காவுக்கு 40 கோடி டாலர் (சுமார் ரூ.2,700 கோடி) முன் பணம் செலுத்தியிருந்தார்.
ஆனால், புரட்சிக்குப் பின்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட்டதால் ஒப்பந்தப்படி ஈரானுக்கு ராணுவ தளவாடங்களை அமெரிக்கா அளிக்கவில்லை.
ஈரான் அளித்த முன்பணத்தையும் திருப்பிச் செலுத்தவில்லை.
இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து அந்தத் தொகையை வட்டியுடன் சேர்த்து 170 கோடி டாலராக திருப்பிச் செலுத்துவதாக அமெரிக்க அரசு அறிவித்தது.
கைதிகள் பரிமாற்ற முறையில், ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 அமெரிக்கக் கைதிகள் விடுவிக்கப்பட்ட நேரத்தில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கைதிகள் பரிமாற்றத்துக்கு ஈரானை ஒப்புக் கொள்ளச் செய்வதற்காகவே அந்தத் தொகை அளிக்கப்படுவதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குடியரசுக் கட்சி எம்.பி.க்களில் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், ஈரானுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்ட தொகை, அமெரிக்கக் கைதிகளை விடுவிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட லஞ்சம் இல்லை என ஒபாமா அரசு உறுதியாக மறுத்து வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:
கைதிகளை விடுவிப்பதற்காக ஈரானுக்கு அரசு எந்தத் தொகையும் அளிக்கவில்லை.
ரகசியமாகப் பணம் கொடுத்து விடுவிக்க, அந்தக் கைதிகளில் யாரும் அமெரிக்க உளவாளிகள் இல்லை என்றார் அவர்.
எல்லோருக்கும் தெரியும் இவர்கள் ஒன்று விட்ட சஹோதர்கள் நீண்ட காலமாக ஈரான் அமெரிக்க இஸ்ராயில் முன்பு முரண் பட்டு கொண்டது எல்லாம் நாடகம் என்று
ReplyDeleteஅல்லாஹ்வினுடைய சாபக்கேடும் உலக அழிவும் நேருங்கிக்கொண்டிருக்கின்றன என்று சொல்வதை தவிர வேறு எதுவுமில்லை....
ReplyDelete