சிறு நீரகங்களை கொள்ளையடிப்பதற்கு 15 இலட்சம், பெற்றுக்கொண்ட இலங்கை வைத்தியர்கள்..!
இலங்கையை மையப்படுத்தி சட்டவிரோதமாக சிறுநீரகத் தொகுதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தமைக்காக இந்தியாவில் கைதான, பிரதான சூத்திரதாரியிடம் இருந்து முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
சுரேஷ் பிரஜாபதி என்ற அவர், இலங்கையில் சிறுநீரகத்தொகுதி பரிமாற்றம் தொடர்பில் நிலவும் சட்டத்திட்டங்களின் குறைபாடுகளை பயன்படுத்தி தாம், இந்த வணிகத்தை மேற்கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.
மேலும் இதற்காக இலங்கையின் பல வைத்தியசாலைகளை இணைத்துக் கொண்டதாகவும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சிறுநீரகத்தொகுதி கொடையாளியையும், அதனை பெற்றுக் கொள்ளவுள்ளவரையும் இலங்கைக்கு அழைத்து வந்து, சில தினங்கள் தங்க வைக்கப்படுவார்கள்.
இதற்காக சிறுநீரகத் தொகுதியை பெற்றுக் கொள்வோரிடம் இருந்து 30 இலட்சம் இந்திய ரூபாய்கள் அறவிடப்படும்.
அதில் 5 இலட்சம் இந்திய ரூபாய்கள் மாத்திரமே சிறுசீரகத் தொகுதி கொடையாளிக்கு வழங்கப்பட்டதுடன், 15 இலட்சம் ரூபாய் இலங்கையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment