Header Ads



15 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்திய "அரிசி" மீட்கப்பட்டது

அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் அரசிற்கு 15 பில்லியன் நட்டத்தை ஏற்படுத்தி 2014 ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியில் ஒரு தொகையை இன்று வெயங்கொட மற்றும் சேத வத்த பிரதேசங்களில் இருந்து மீட்டுள்ளனர்.

தீவிர மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இவை மீட்கப்பட்டன.

2014 ம் ஆண்டு இந்நாட்டில் நிலவிய காலநிலை காரணமாக 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்து .

எனினும் இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் தொகையே இன்று (01) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்கள் கொழும்பு துறைமுகத்தில் சேமிக்கப்பட்டிருந்த இவை பின் வெவ்வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.