Header Ads



"எங்களுக்கு 15 சதவீத முஸ்லிம் வாக்குகள் எந்நாளும் இருந்தன, அது 4 சதவீதமாக குறைந்தது"

உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, கைச் சின்னத்தில் போட்டியிடுமாயின் அதற்கு ஆதரவளிப்பதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ (எம்.பி) ஆகிய இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமானஎஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் ஆலோசகர்களான முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகாவும் மஹிந்தவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகையால், கிராம மட்ட மக்கள் எதிர்பார்த்திருக்கின்ற வெற்றியை, அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்காத  கை மற்றும் நாற்காலிச் சின்னங்களுக்கு வாக்களித்த 7 இலட்சம் வாக்குகள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எமக்கு கிடைக்காமல் போய்விட்டன. அதேபோல, எங்களுக்கு 15 சதவீத முஸ்லிம் வாக்குகள் எந்நாளும் இருந்தன. அது நான்கு சதவீதமாக குறைந்தது. நகரங்களில் 35 சதவீதமான வாக்குகள் இருந்தன. அதுவும் 20 சதவீதத்துக்கு குறைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கத்தோலிக்க வாக்குகள் 40 சதவீதம் இருந்தன. அதுவும் 20 சதவீதமாக குறைந்தது.  அவற்றையெல்லாம் நாங்கள் மாற்றி, மீண்டும் பலமானதொரு கட்சியாக எங்களுடைய எதிர்காலத்தை கவனத்தில் எடுத்துகொண்டு செயற்படுகின்றோம். 

1 comment:

  1. பெரும்பான்மை கட்சிகள் அனைத்தும் ஓன்று சேர்ந்து நம்மை கருவறுக்கும் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆணாம் நம் கட்சிக்காரர்கள் ஆளுக்கொரு மேடை போட்டு அவரவர் குற்றங்களை கக்கி திரிகிறார்கள்.இதன் விளைவு இப்போது தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.