Header Ads



13,000 ஆண்களின் தாடிகளை, வலுக்கட்டாயமாக மழித்துவிட்ட போலிஸார்

தாஜிகிஸ்தானில் ஒரே ஒரு பிரதேசத்தில் மட்டும், சுமார் 13,000 ஆண்களின் தாடிகளை தாங்கள் சமீபத்தில் மழித்துவிட்டதாக போலிஸார் கூறுகின்றனர்.

இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் அந்நிய தாக்கங்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் நாடளாவிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

பெண்களும், ஹிஜாப் எனப்படும் தலையங்கிகளை அணியக்கூடாது என்று கோரப்படுகிறார்கள். பல்கலைக்கழகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் இந்த ஹிஜாப் அணிய ஏற்கனவே தடை இருக்கிறது.

வலுக்கட்டாயமாக தாடி மழிக்கப்பட்ட ஒருவர் தான் அவமானப்படுத்தப்பட்டது போல உணர்ந்ததாக பிபிசியிடம் கூறினார். இந்த நடவடிக்கை உண்மையில் தீவிரவாதமயமாதலை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.

8 comments:

  1. இது கண்டிக்கப்பட வேண்டியது. அந்த மக்களுடைய உணர்வுகளின் உரிமைகளின் மீது மேற்கொள்ளப்பட்ட வலுக்கட்டயமான திணிப்பு இது. மனித உரிமை மீறல்கள் இவற்றை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

    தவிர தாடிகளை மழிப்பதனாலும் தலைக்கவசங்களை ஒழிப்பதனாலும் தீவிரவாதத்தை ஒழித்துவிடலாம் என்று நினைப்பது படு முட்டாள்தனமானது. தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்களில் ஒன்று மக்கள் பாராபட்சமாக நடாத்தப்படுவது. அது நீடிக்கும் வரை தீவிரவாதத்தை ஒழிக்கவே முடியாது!

    ReplyDelete
  2. இவையெல்லாம் தனி மனித உரிமை மீறல்களாகாதா? இவ்வாறான சந்தர்ப்பங்களில் மனித உரிமைசார் அமைப்புக்கள் மௌனித்திருப்பது, அவர்கள் வேறோர் புற விசையினால் இயக்கப்படுவதை வெளிப்படையாகவே காட்டுகிறது.

    ReplyDelete
  3. உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்போது மனிதவுருமை பேசும் மேற்கத்திய நாடுகள் இந்த விடயத்தில் வாய் திறக்கமாட்டார்கள் ஏன் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள்

    ReplyDelete
  4. பொலிஸார் இஸ்லாத்தை விட்டு விட்டார்களா?

    ReplyDelete
  5. muslim naattil ippadi nadappa? fardha daadi illamal saiwadu yahoodi nasarani in welai allawa ? adanai muslimgalin arasu saidal?
    islam??? europe il islam walargiradu daadi fardha perugirazu ! muslim aatchiyalargal eppa islaattil nulaiwargalo theriyawillai .mudal islaathin edirigal awargal thaan. SHAITHANGAL

    ReplyDelete
  6. The more they beat on GOLD, it will sign more

    ReplyDelete
  7. முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா கூறியுள்ளது போன்று மூன்று சமூகத்திலும் முட்டால்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணம்....

    ReplyDelete
  8. hallo jasslya jesly thayavu seyzu ungaludaya photovai ahatrivittu ungal karuttai therivittal nallazu .
    ella ullangalum ondrupool illai

    ReplyDelete

Powered by Blogger.