11.000 மாணவர்களை புன்னகைக்க வைத்த ஸம் ஸம் பவுண்டேஷன்
வருங்காலத் தலைமுறைக்கு நாம் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு ஆத்மீகத்துடன் கூடிய கல்வியாகத்தான் இருக்கும். அந்தவகையில் ஸம் ஸம் பவுண்டேஷன் 2016 புதிய கல்வி ஆண்டை புன்னகையுடன் ஆரம்பிக்க 11,000 மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது.
School with a smile எனும் வேலைத் திட்டம் மூலம் ஒரு மாணவருக்கு 3000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய ஒரு பொதி வழங்கப்படுகிறது.இப் பொதியில் தரம் வாய்ந்த ஒரு புத்தகப் பை, சப்பாத்துக்கான 1000 ரூபா பெறுமதியான வவுச்சர், கொப்பிகள், காகிதாதிகள் என்பன உள்ளடங்குகின்றன.
கண்டி மாவட்டம்(4000), தலவாக்கலை(700), மொனராகலை(2000), வீரவில (600), வெலிப்பன்ன,வெலிகம(250), தோப்பூர்(1000), ஹொரோப்பொத்தானை(1000), வீரச்சோலை(1000), யாழ்ப்பாணம்(270), கொழும்பு(180) ஆகிய பிரதேசங்களில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் சமூகங்களில் தேவையுடைய 11,000 மாணவர்களுக்கு இப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
“ஒழுக்கம் நிறைந்த குடும்பங்கள் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்.“ “போதையற்ற நாட்டை நோக்கி…“ என்ற தொணிப் பொருள்களில் இம் முறை அப்பியாசப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஒழுக்கம் நிறைந்த குடும்பங்களாக நாம் மிளிர வேண்டும் என்பதையும் போதைப் பொருளை தடுக்கும்,வெறுக்கும் எண்ணத்தை சிறார்களின் உள்ளத்தில் ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
வறுமையில் இருப்போருக்கு உதவுதல்,பெற்றோர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க உதவுதல், சகவாழ்வுக்கான விதையினை மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களில் தூவுதல் ஆகிய பிரதான இலக்குகளுடன் School with a smile எனும் வேலைத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
இத் திட்டத்திற்கான 3 கோடி 30 இலட்சம் ரூபாவினை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்கள் மட்டுமே வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத் திட்டத்திற்கு உடலால்,பொருளால்,பணத்தால் உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஸம் ஸம் பவுண்டேஷன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
Great service
ReplyDeleteMay Allah accept your good deeds
Aameen
Great service
ReplyDeleteMay Allah accept your good deeds
Aameen
Masha allah good effort.may allah accept our good deeds
ReplyDeletefine praiseworthy move.
ReplyDeleteZam zam foundation be success at all
ReplyDelete