100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பனிப்புயல் ருத்ர தாண்டவம் - முடங்கினார் ஒபாமா
அமெரிக்க நாட்டில் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பனிப்புயல் தாக்கி வந்தது. வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மாகாணங்கள் தொடங்கி நியூயார்க் வரையில் பனிப்புயல் ஆதிக்கம்தான். அங்கு சனிக்கிழமை மாலை நிலவரப்படி ஒன்றரை லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
1922–ல் அதிகபட்சமாக 28 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
100 ஆண்டுகளில் இல்லாத அளவு
ஆனால் இப்போது 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் 3 அடிகளுக்கும் மேலாக பனிப்பொழிவு இருந்தது. குறிப்பாக கிலேங்கரி, மேற்கு வெர்ஜினியா ஆகிய இடங்களில் 40 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. பிலோமான்ட், வெர்ஜினியா, ரெட்ஹவுஸ், மேரிலேண்ட் ஆகிய பகுதிகளில் 39 அங்குல பனிப்பொழிவு இருந்தது.
டல்லாஸ் சர்வதேச விமான நிலையத்தில் 28 அங்குலமும், நியூயார்க் ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் 27.7 அங்குலமும் பனிப்பொழிவு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 பேர் உயிரிழப்பு
பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் ஏற்பட்ட விபத்துக்களில் 18 பேர் உயிரிழந்தனர். நியூயார்க்கில் மட்டும் 5 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது.
ஜார்ஜியா, டென்னஸி, பென்சில்வேனியா, மேரிலேண்ட், கென்டக்கி, வடக்கு கரோலினா, நியூஜெர்சி, நியூயார்க், டெலாவேர், வெர்ஜினியா, மேற்கு வெர்ஜினியா, வாஷிங்டன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து முடக்கம்
நியூஜெர்சி மாகாணம் வெள்ளக்காடாகி உள்ளது.
கென்டக்கி, பென்சில்வேனியாவில் 12 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
நேற்று முன்தினமும், நேற்றும் 8 ஆயிரத்து 569 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன. நியூயார்க் நகரில் சனிக்கிழமையன்று பயண தடை அமல்படுத்தப்பட்டிருந்தது. பஸ், ரெயில் சேவை முழுமையாக முடங்கியது.
பனிப்புயல் எதிர்பார்ப்பில் பெரும்பாலான மக்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்களை வாங்கி குவித்து விட்டனர். அதன்காரணமாக இப்போது கடைகளில் அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வெள்ளை மாளிகையில் முடங்கினார் ஒபாமா
அமெரிக்க அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் அவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஒபாமா, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில்தான் உள்ளார்.
கிழக்கு கடலோர பகுதிகளில் பொதுமக்களின் சகஜ வாழ்க்கை முழுமையாக முடங்கிப்போய் விட்டது. பனிப்புயல் முடிவுக்கு வந்தாலும், நிலைமை சீராக ஒன்றிரண்டு நாட்கள் ஆகும்.
நீங்க சூடா குண்டு போடிங்க முஸ்லீம்கள் மீது coolலா குண்டு போட்டான் அல்லாஹ் 7 ஸ்டேட்களில் ஒரு நொடியில் fullலா மூடி இருப்பான் அங்கு அல்லாஹ்வை வணங்கும் மூமின்களால் காப்பாத்தி உள்ளான் அல்லாஹ் இதை எல்லாம் ஒரு பாடமாக எடுங்க
ReplyDelete