Header Ads



ஒரு இனிங்சில் 1,009 ஓட்டங்களை பெற்று சாதனை


டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பிரணவ் தனவதே எனும் மும்பாயைச் சேர்ந்த மாணவன் ஒருவர் ஆயிரம் ஓட்டங்களை எடுத்துள்ளார்.

15 வயதான இவர், மும்பாயில் நடத்தப்படும் எச்.டி.பண்டாரி கிண்ணத்துக்கான பள்ளிகளுக்கிடையே நடக்கும் போட்டியொன்றிலேயே இச்சாதனையை படைத்துள்ளார்.

பிரணவின் ஆட்டத்தில், 6 ஓட்டங்கள் 59, 4 ஓட்டங்கள் 127 உள்ளடங்கியிருந்ததோடு, 312.38 ஓட்ட சராசரியை (Strike Rate) கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அவரது பாடசாலையான கே.சி.காந்தி கல்லூரி அணி ஆர்ய குருகுல கல்லூரியுடன் மோதிய போட்டியிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

பிரணவ், ஆட்டமிழக்காமல் 1,009 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், 1465 ஓட்டங்களுடன் இன்னிங்ஸை நிறைவு செய்தது அந்த அணி.

" நான் ஆடத்தொடங்கியபோது சாதனையை முறியடிப்பது பற்றியெல்லாம் மனதில் வைத்திருக்கவில்லை. அது குறித்து எனது கவனம் இல்லை. எனது இயல்பான ஆட்டத்தையே நான் ஆடினேன்" என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் வழங்கிய  பேட்டியில் பிரணவ் குறிப்பிட்டார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரணவ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 199 பந்துகளில் 652 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் 1899ம் ஆண்டில் ஆர்தர் கோலின்ஸ் என்பவரின் ஆட்டமிழக்காது பெற்ற 628 ஓட்ட முந்தைய சாதனையை அதே நாளில் முறியடித்திருந்தார். (குறித்த சாதனைக்கு முன்னர் 1886 இல் 485 ஓட்டங்களை ஏ ஈ ஸ்டொட்டார்ட் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது) 

(http://static.espncricinfo.com/db/ARCHIVE/1890S/1899/ENG_LOCAL/OTHERS/CLARKES_NORTH-TOWN_22-28JUN1899.html)
Email Facebook Twitter Google+ Pinterest PrintFriendly Teilen

No comments

Powered by Blogger.