"சிங் ஹல" 10 ஆம் திகதி தனது முதல், பகிரங்க நடவடிக்கையில் இறங்குகிறது
சிங்ஹல மக்களின் அடையாளத்தை பாதுகாப்பதற்காக சிங்ஹல ஜாதிக பலமுலுவல என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது செய்தியாளர் சந்திப்பு நேற்று (06) கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது கருத்துரைத்த அமைப்பின் தலைவர் யக்கலமுல்ல பாவர தேரர்,
சிங்ஹல மக்களின் இறைமையை மீண்டும் உறுதிப்படுத்தும் முகமாகவே தமது அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் சிங்ஹல மக்கள் அமைதியை கடைப்பிடித்து வந்தமை காரணமாக அவர்களின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
தமது அமைப்பு அரசியல் வயப்பட்டதல்ல என்று குறிப்பிட்ட அவர், சிங்ஹல மக்களின் உரிமைகளை பாதுகாப்பதே அமைப்பின் பிரதான நோக்கம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி அமைப்பின் முதல் நடவடிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment