தமிழ் பேரினவாதம், முஸ்லிம்களை கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கின்றது - YLS ஹமீட்சீற்றம்
-Asraf Kan-
மறைந்த தலைவர் கனவு கண்ட புதிய கல்முனைநகரம், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில்விக்ரமசிங்கவினால் வாக்குறுதியளிக்கப்பட்டு மீண்டும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவினால் அவ்வாக்குறுதி புதுப்பிக்கப்பட்டு, இன்று அது செயலுருப் பெறுவதற்கானமுன்னெடுப்புக்கள் நடைபெறுகின்ற நிலையில், தமிழ்தரப்பினர் குறிப்பாக ரெலோ அமைப்பு தலைவர்செல்வம் அடைக்கலநாதன், தமிழர் மகா சபைபோன்ற அமைப்புக்கள் இணைந்து இதற்கு எதிராகஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருப்பதும் அதனைபாரதுரமாக எதிர்ப்பதும் ஆச்சரியப்பட்க் கூடிய ஒருவிடயமல்ல. வட கிழக்கின் மொத்த முஸ்லிம்சமூதாயம் தொடர்பாக தமிழ் தரப்பினரின்மனோநிலையை எடுத்துக் காட்டுகின்ற மற்றொருநிகழ்வு மட்டுமே இதுவாகும்.
அன்று மறைந்த தலைவர் இந்த புதிய நகரத்திட்டத்தைக் கொண்டுவந்த பொழுதும் இதனைஎதிர்த்தார்கள். இங்கு அவர்கள் மூன்று பிரதானவிடயங்களை சுட்டிக் காட்டுகின்றார்கள். ஒன்றுஉத்தேச புதிய நகரத்திற்காக சுவீகரிக்கப்பட இருக்கும் காணிகளில் கணிசமான அளவு காணிகள் தமிழர்களுக்கு உரியதாகும். இரண்டாவது,கல்முனையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். எனவே புதிய நகரத் திட்டம் சனத்தொகை விகிதாசாரத்தில் மாற்றத்தைஏற்படுத்தும். 3 வது கல்முனை ஒரு வியாபார கேந்திரநிலையமாக மாறும் என்பனவாகும்.
தமிழர்கள் இன்று கல்முனை என்ற பதத்திற்குள்அடையாளப்படுத்துகின்ற பிரதேசத்தில் தமிழர்கள்அதிகம் வாழுகின்றார்கள் எனவே அதற்கு நேரேஏற்படுத்தப்படுகின்ற குடியிருப்புக்கள் தங்களின்விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாதுஎன்ற வாத்த்தை அப்படியே எடுத்துக் கொண்டாலும்கல்முனையில் சின்னத்தம்பி வீதிவரை முஸ்லிம்களேபெரும்பான்மையாக வாழுகின்றார்கள். புதியநகரத்திற்காக பெறப்பட உத்தேசிக்கப்படுகின்ற காணிகளின் பெரும்பகுதி இந்த சின்னத்தம்பி வீதியின்எல்லைக் கோட்டுக்குள்ளேயே உள்வாங்கப்படுகின்றதுஎன்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமைப்பட வேண்டும். ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ் தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஆனால் நடை முறையில் முஸ்லிம்களுடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கு நாங்கள் ஒருபோதும் தயாரில்லை என்பதை தொடர்ச்சியாக காட்டி வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் அன்று ஒரு நாள் அக்கரைப்பற்றில் இருந்து ஆலையடி வேம்பு பிரதேச சபை பிரிந்ததும், அதன் பின்னர் நிந்தவூரிலிருந்து 5000 இற்கும் குறைவான வாக்குகள் கொண்ட தமிழ் கிராமமான காரைதீவுக்கு தனியாக ஒரு பிரதேச சபையையும், ஒரு பிரதேச செயலகத்தையும் பெற்றுக் கொண்டதும், சனத் தொகையை கூட்டிக் காட்டுவதற்காக சுமார்2000 வாக்க்கள் கொண்ட மாளிகைக்காடு என்ற முஸ்லிம் கிராமத்தையும், சுமார் 1000 வாக்குகள் கொண்ட மாவடிப்பள்ளி என்ற முஸ்லிம் கிராமத்தையும் தன்னோடு இணைத்துக் கொண்டதும்,
இதேபோன்றுதான் வடபுலத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக தடைக்கற்கள்போடப்படுகின்றன. அதேநேரம் குறிப்பாகமட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குச்சொந்தமான 10,000 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட அன்று புலிகளால் கையகப்படுத்தப்பட்ட காணிகள்இன்றும் மீளளிக்கப்படாமல் இருக்கின்றன. கடந்தகாலங்களில் அரசினால் அல்லது அரச படையினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளின் மீட்புக்காக தமிழ் தலைவர்கள் போராடுகின்றார்கள். அது நல்ல விடயம். நாமும் அதற்கு எமது ஆதரவைத்தெரிவிக்கின்றோம். ஆனால் அதே தமிழ் தலைமைகள் தமிழ் தரப்பினர் முஸ்லிம்களிடமிருந்து கையகப்படுத்திய காணிகளை விடுவிப்பதற்கு ஏன்முயற்சிக்கின்றார்களில்லை. மாறாக வடக்கிலிருந்துஒரு கட்சியின் தலைவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கல்முனைக்கு வந்து கல்முனை நகரம் அபிவிருத்திசெய்யப்படக் கூடாது என்று ஆர்ப்பாட்டம்செய்கின்றார். எனவே இங்கு தமிழ் பேரினவாதம்சரியான கோணத்தில் பார்க்கப்பட வேண்டிஇருக்கின்றது.
இந்நாட்டில் முஸ்லிம்கள் இரு தலைக் கொள்ளி எறும்புகளாக சிங்களப் பேரினவாதத்தினாலும், தமிழ்பேரினவாதத்தினாலும் நசுக்கப்படுவதை முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் சமூகமும் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும். இதில் சிங்கள பேரினவாதிகளின் தாக்கம் வட கிழக்கிற்கு வெளியேதான் பெரும்பாலும் அதன் வீரியத்தைகாட்டுகின்றது. காட்டவும் முடியும். அதேநேரம் வடகிழக்கு தமிழ் பேரினவாதம் முஸ்லிம்களை கவ்விப்பிடித்துக் கொண்டிருக்கின்றது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒற்றுமைப்பட்ட ஒரு சமூதாயத்தின்பயணத்தை உடைத்தெறியும் சக்தி இந்தஇனவாதிகளுக்கு இல்லை. என்பதை புரியவைக்கவேண்டும்; என்றும் குறிப்பிட்ட அவர் எவ்வாறு சிங்கள பேரினவாதம் என்பது மொத்த சிங்கள மக்களையும் குறிக்கவில்லையோ அதேபோல் தமிழ் பேரினவாதம் என்பது முழு தமிழ் சமூகத்தையும் குறிக்கவில்லை. எனபதை நாம் இங்கு விளங்கிக் கொள்ள வேண்டும். அதேநேரம் இனவாதிகள் சிறிய தொகையினராக இருந்தாலும் அவர்களது செயற்பாடுகள் மொத்த சமூகத்தையும் பாதிக்கும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
Post a Comment