றிஷாத் பதியுதீன் VS ஆனந்த சாகர தேரர் - வாதப்பிரதிவாதமும், விதண்டாவாதமும்..!
கலாநிதி எம். எஸ். அனீஸ்
சிரேஸ்ட விரிவுரையாளர்,
கொழும்புப் பல்கலைக்கழகம்
அண்மைய நாட்களில் எமது ஊடகங்களின் பிரதான பேசுபொருளாக மாறியுள்ள தலைப்புத்தான் கௌரவ அமைச்சர் றிஷார்ட் பதியுத்தீன் அவர்கள் ஆனந்த சாகர தேரர் எனும் பௌத்த மதகுரு ஒருவருடன் நாளை திங்கட்கிழமை (28) இரவு 10 மணிக்கு ஹிரு எனும் சிங்கள தொலைக்காட்சியில் பங்குகொள்ளவிருக்கும் நேரடி விவாத நிகழ்ச்சியாகும்.
சிரேஸ்ட விரிவுரையாளர்,
கொழும்புப் பல்கலைக்கழகம்
அண்மைய நாட்களில் எமது ஊடகங்களின் பிரதான பேசுபொருளாக மாறியுள்ள தலைப்புத்தான் கௌரவ அமைச்சர் றிஷார்ட் பதியுத்தீன் அவர்கள் ஆனந்த சாகர தேரர் எனும் பௌத்த மதகுரு ஒருவருடன் நாளை திங்கட்கிழமை (28) இரவு 10 மணிக்கு ஹிரு எனும் சிங்கள தொலைக்காட்சியில் பங்குகொள்ளவிருக்கும் நேரடி விவாத நிகழ்ச்சியாகும்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் மூலம் வில்பத்து காட்டினை அமைச்சர் றிஷார்ட் பதியுத்தீன் அழித்து வருகின்றார் எனவும் அவரது அடியாட்களை வைத்துக்கொண்டு கொழும்பிலும் வெளியிடங்களிலும் போதைபொருள் (குடு) வியாபாரம் செய்கின்றார் எனவும் இரண்டு பாரிய குற்றச்சாட்டுகளை இந்த மதகுரு கடந்த சில தினங்களுக்கு முன்பாக பகிரங்கமாக கூறியிருந்தார். கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக பௌத்த மதகுருமார் சிலராலும் சூழலியல் ஆர்வலர்கள் எனக் கூறப்படும் சிலராலும் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த ஊர்வலத்தின் முடிவில் கூட்டப்பட்ட கூட்டத்திலேயே இவர் மேற்கூறிய இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதில் முதலாவது குற்றச்சாட்டு என்பது கடந்த பல மாதங்களாக சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளினால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டாகும். இது தொடர்பாக கடந்த காலங்களில் பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றமையும் இன்றுவரை அது தொடர்ந்து வருகின்றமையும் நாடறிந்த விடயங்களாகும். ஆனால் இந்த இனவாத சக்திகளினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள விடயம்தான் அமைச்சரினால் போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டாகும். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் ஒருபுறம் அமைச்சரின் நன்னடத்தை மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் கூடிய அரசியல் வாழ்க்கை என்பவற்றை நேரடியாகப் பாதிக்கக்கூடிய விடயங்களாகும் என்பதில் எதுவித மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது. மறுபுறமாக வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு மிகவும் இடைஞ்சலாக இந்த விடயம் இன்று உருவெடுத்துள்ளது. பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் இந்த விடயம் பலராலும் பலமுறை பேசப்பட்டபோதிலும் இன்றுவரை அதற்கான நிரந்தரத் தீர்வு என்பது இல்லாமலேயே அது ஒரு தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பிரதானமான காரணமாக அமைந்த விடயங்களில் அமைச்சர் றிஷார்ட் பதியுத்தீன் அவர்கள் பொதுவேட்பாளருக்கு வழங்கிய ஆதரவு பிரதானமான பேசுபொருளாக பார்க்கப்படத் தொடங்கிய நாளில் இருந்து இந்த அமைச்சரை குறிவைத்து தாக்குவதில் மஹிந்த சார்பு சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு சில இனவாத ஊடகங்களும் தமது தொடர்ச்சியான பங்களிப்பினை செய்து வருகின்றமை மிகமுக்கியமாக குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். இந்தத் தாக்குதலுக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு விடயம்தான் வில்பத்து காடழிப்பு என்பதாகும். உண்மையில் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட இந்தக் குற்றச்சாட்டு வேண்டுமென்றே சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது அதனை முன்வைப்பவர்களுக்கே தெரியும் என்பதுதான் உண்மை. இடம்பெயர்ந்து கால்நூற்றாண்டுகளின் பின்னர் காடாகிப் போயுள்ள இடங்களில் மீள்குடியேறும் இந்த அப்பாவி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை பயன்படுத்தி இந்த அமைச்சரை பழிவாங்கத்துடிக்கும் இவர்களின் செயலுக்கும் இவர்களை ஒரு இனச்சுத்திகரிப்பு மூலம் வெளியேற்றிய விடுதலைப் புலிகளின் செயலுக்கும் இடையே ஒரு வித்தியாசத்தை காணமுடியவில்லை.
பலமுறை வில்பத்து காடழிப்பு தொடர்பாக தனது தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தி வந்த அமைச்சர் அவர்கள் இம்முறை தன் தனிப்பட்ட வாழ்வின்மீது சுமத்தப்பட்டுள்ள போதைபொருள் வியாபார குற்றச்சாட்டினால் மிகவும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளமை கடந்த சில தினங்களாக அவரது எதிர்செயல்பாடுகள் மூலம் மிகவும் தெளிவாகப் புலப்படுகின்றது. வழமைபோல அவர் இந்தக் குற்றச்சாட்டிற்கு எதிராக ஒரு முறைப்பாட்டினை பொலிசில் பதிவு செய்ததுடன் விட்டுவிடாது இந்த குற்றச்சாட்டினை பகிரங்கமாக நிரூபிக்கும்படி அந்தத்தேரரை சவாலுக்கு அழைத்தமையும், அந்த சவாலினை குறிப்பிட்ட தேரர் ஏற்றுக்கொண்டமையினதும் விளைவுதான் இந்த தொலைக்காட்சி விவாதத்தின் அடிப்படையாகும்.
இந்த விவாதம் தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் இருந்து பலதரப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் எமது முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலே இடம்பெற்றுவருவதனை அவதானிக்கமுடிகின்றது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பலரும் பலவாறாக கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.
இதில் முதலாவது பிரிவினர் கண்களை மூடிக்கொண்டு இந்த விவாதம் நடக்கவே வேண்டும் எனவும் அதில் அமைச்சர் வெற்றிபெறுவார் எனவும் அந்த வெற்றிக்காக தாம் நோன்பு நோற்கவும் தயாராக இருப்பதாகவும் கூறி அமைச்சரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேலும் ஊடகங்கள் மூலமாக ஏனைய முஸ்லிம்களையும் நோன்பு நோற்று தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்படியும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நாடளாவிய ரீதியில் இருக்கும் அமைச்சரின் அதி தீவிர ஆதரவாளர்களும் அவரின் மீது அளவற்ற அன்பும் இரக்கமும் கொண்டுள்ள அவரது அரசியல் அபிமானிகளுமே இந்த விடயங்களில் அதி தீவிரமாக இருப்பது தெளிவாகும். இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு ஆட்சியாளர்களாலும் சிங்கள பேரினவாதிகளினாலும் அநியாயங்கள் இழைக்கப்பட்ட போதெல்லாம் அதற்கெதிராக மிகவும் தைரியமாக குரல் கொடுத்ததன் மூலம் அமைச்சர் அவர்கள் மிகவும் சிறிய வயதிலேயே இவ்வாறானதொரு பரவலான ஆதரவினை குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தியிலே பெற்றுள்ளார். இந்த ஆதரவாளர்கள்தான் இவ்வாறு பின்விழைவுகள் எதனையும் பாராது இந்த விவாதத்தினை ஆதரித்து நிற்கும் பிரிவினராகும்.
மற்றுமொரு பிரிவினரோ இந்த விவாதத்திற்கு எதிராக தமது கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இவர்களில் அநேகமானோர் அமைச்சரின் அரசியல் எதிரிகளாவர். சிலவேளை இவர் இந்த விவாதத்தில் வெற்றி பெற்றுவிட்டால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலே ஒரு அரசியல் ஹீரோ ஆகிவிடுவார் என்பது இவர்களது பிரதான அச்சமாகும். இவர்கள் எப்போதும் தூரநோக்கோடு சிந்திக்காது அமைச்சரின் அரசியல் வாழ்வினை எப்படி முடிவுக்கு கொண்டுவரலாம் அல்லது அவரது கட்சியினை எப்படி தோற்கடிக்கலாம் என்பதுபற்றியே சிந்திப்பார்கள். அதனால் பொதுவாகவே அமைச்சர் அவர்கள் தேவை இல்லாத விடயங்களையெல்லாம் பெரிதாக்கிக் கொண்டு அதன்மூலம் அரசியல் இலாபம் பெறமுனைகின்றார் என்றதொரு புளித்துப்போன கதையினை தொடர்ந்தும் சொல்லி வருவதாக கூறப்படுகின்றது. அண்மைக்காலமாக முஸ்லிம் அரசியலிலும் தேசிய அரசியலிலும் இந்த அமைச்சரும் அவரது கட்சியும் பெற்றுவரும் அபரிமிதமான வளர்ச்சியினை சகித்துக்கொள்ள முடியாதவர்களாய் சிலர் சில வேளைகளில் தமது சமூகப் பொறுப்புகளை மறந்து இவ்வாறு நடந்து கொள்வதானது மிகவும் வேதனைக்குரியது என பலரும் எண்ணுகின்றனர்.
இன்னுமொரு பிரிவினரோ, இந்த விவாதம் நடைபெறக்கூடாது என எண்ணுகின்றனர். அதாவது விவாதத் தலைப்பு, விவாதம் புரியவிருப்பவரின் பின்புலம் (பௌத்த மதகுரு-{பொதுவாக சிங்கள அரசியல்வாதிகள் கூட பௌத்த மதகுருமாருடன் பகிரங்க விவாதங்களுக்கு செல்கின்ற ஒரு மரபு நமது நாட்டில் இல்லை}), அதனை நடத்தவிருக்கும் ஊடகத்தின் பின்புலம் (மஹிந்த அணிசார்பு இனவாத ஊடகம்), விவாத மொழி (சிங்கள மொழி {அமைச்சரின் தாய்மொழி சிங்களம் அல்ல}), நாட்டின் அரசியல் சூழ்நிலை, இந்த மதகுருமாரை வழிநடத்தும் இனவாத சக்திகளின் நோக்கம் (இனக்கலவரம் ஒன்றை உருவாக்கல்), இன்றைய நல்லாட்சியின் முஸ்லிம்கள் தொடர்பான நிலைப்பாடு (இன்றுவரை முஸ்லிம்களை திருப்திப்படுத்தக்கூடிய எந்த ஒரு செயலும் திருப்திகரமாக முன்னெடுக்கப்படவில்லை) போன்ற பல்வேறு விடயங்களை மனதில் இருத்தி இந்த விவாதம் தற்போதைய சூழலில் இடம்பெறாமல் இருப்பதானது சாலப்பொருத்தமானது என எண்ணுகின்றனர். இதில் அமைச்சரின் ஆதரவாளர்களும், நடுநிலைவாதிகளும், அதேபோன்று அவரது அரசியல் எதிரிகளும் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இந்தக் கட்டுரை ஆசிரியரும் இந்த அபிப்பிராயமுடையவரே. சிலவேளை இந்த விவாதத்தின் மூலம் இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு நாம் உரமூட்டிவிடுவோமோ என்ற அச்சம் இந்தப் பிரிவினருக்கு உண்டு.
எனினும் கடந்த கால குற்றச்சாட்டான வில்பத்து காடழிப்பு தொடர்பாக மாத்திரம் இது நடக்குமாக இருந்தால் நாம் யாவரும் ஒட்டுமொத்தமாக நின்று இதனை தடுக்க முனையலாம். ஆனால் அமைச்சரின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பானதொரு விடயம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவரது பண்புகள் மற்றும் குணாதிசயங்கள் இன்று பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக கூறப்பட்டுள்ளதால் அவற்றை பகிரங்கமாகவே மறுத்து தான் ஒரு குற்றமற்றவர் என்பதனை நிரூபிக்கவேண்டியதொரு கடப்பாடு மக்கள் பிரதிநிதியான அவருக்கு உண்டு என்பதனை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்கவேண்டியதொரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அவரது குடும்ப வாழ்வு, அவரது பிள்ளைகளின் எதிர்காலம், மற்றும் அவரது பொதுவாழ்வு என்பன இந்தக் குற்றச்சாட்டுடன் அதிகமாகவே தொடர்புபட்டுள்ளன என்பதனையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு அவர் போதைப்பொருள் வியாபாரம் செய்கின்றார் என்றால் அதனைப் போன்றதொரு பாரிய குற்றம் இருக்க முடியாது. முஸ்லிம்களாகிய நாம் அதனை ஆதரிக்கவும் முடியாது. எனவே தனது தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வினை பாதிக்கக்கூடிய இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு அவர் தன்னை நிரபராதியாக காட்டவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கின்றது என்பதனையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அதேசமயம் அவர் சார்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருக்கும் இந்த வில்பத்து தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தார்மீகக் கடப்பாடும் தனக்கு இருப்பதாக அவர் நினைப்பதில் தவறுகாண முடியாதுள்ளது. எனவே அவரை இந்த விவாதத்தில் கலந்துகொள்ளவிட்டு அவர்பக்க நியாயங்களை நாட்டுக்கு முன்வைக்க விடுவதே பொருத்தமானதாக இருக்கும்.
இதில் வெற்றி அல்லது தோல்வி என்ற விடயங்களுக்கு இடமில்லை என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலவேளைகளில் அவர் தனது நியாயங்களை கூறினாலும் கூட அவர்கள் எந்தளவு தூரம் அதனை ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள் என்பது மற்றுமொரு விடயமாகும். மேலும் இந்த விவாதத்துடன் இந்தப் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படப் போவதுமில்லை. ஏனெனில் இந்த இனவாத சக்திகளின் பழிவாங்கல் நிகழ்ச்சிநிரல்கள் ஒருபோதும் இத்துடன் நின்றுவிடப்போவதில்லை என்பது வரலாறு எமக்கு கற்றுத்தந்துள்ள பாடமாகும்.
எனவே எமது சுய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் அப்பால் நின்று கலிமாவினை மொழிந்த ஒரு முஸ்லிமாக அவரைப் பார்த்து அவர் தன்னையும் தான் சார்ந்த சமூகத்தினையும் பாதுகாக்க எடுக்கும் இந்த முயற்சிக்கு நாம் யாவரும் எமது மானசீகமான ஆதரவினை நல்குவது எமது சமூகக் கடமையாகும். இந்த விவாதத்தின் மூலம் அவருக்கு தனது கருத்துகளை நாட்டு மக்களுக்கு தெளிவாக புரியக்கூடிய விதத்தில் முன்வைக்ககூடியதொரு ஆற்றலை எல்லாம் வல்ல அல்லாஹ் அருளவேண்டும் எனவும் இதன்மூலம் எதுவித இனமுரண்பாடுகளும் தோற்றுவிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் நாம் யாவரும் பிரார்த்திப்போமாக. மேலும் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மேலான சூழ்ச்சியாளனான அல்லாஹ் எமது எதிரிகளுக்கு நல்வழிகாட்டுவானாக- ஆமீன்
definitely our minister should go to the discussion and he must tell the true thing that is a true muslim never involve in the dealing with drucks and not involve in the ugly action .... Insha allah.... allah is with our minister who serve with pure mind to all mankind not only muslims in srilanka ,.... but also non mislims in the island...
ReplyDeletedefinitely our minister should go to the discussion and he must tell the true thing that is a true muslim never involve in the dealing with drucks and not involve in the ugly action .... Insha allah.... allah is with our minister who serve with pure mind to all mankind not only muslims in srilanka ,.... but also non mislims in the island...
ReplyDeleteDr. Anees அவர்களே, இது ஒரு அரசியல் சித்து விளையாட்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். இதற்கு நீங்கள் வக்காலத்து வாங்க கிளம்பி இருப்பது நீங்களும் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் போல் தெரிகிறது. போதைப் பொருள் வியாபாரம் செய்கிறார் என்று ஒருவர் குற்றம் சாட்டினால் அந்த நபரை சட்ட ரீதியாக அணுகுவதை விடுத்து விவாதத்துக்கு அழைப்பது என்பது ஒரு புத்தி சாதுரியமான விடயமாக கருத முடியாது. இது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களை போல் தானும் ஒரு விவாதம் நடத்தலாம் என்று ரிசாத் அவர்கள் நினைக்கிறார் போல் தெரிகிறது. அது வேற இது வேற. இது ஒரு அத்தியாவசியமான விடயமாக எங்களது பகுத்தறிவுக்கு படவில்லை. அனந்த தேரரை ஹிரோவாக்கும் ஒரு செயலாகவே நாம் பார்க்கிறோம். இந்த விவாதம் நடக்காமல் இருப்பதுவே முஸ்லிம் மக்களின் மத்தியில் பிரபல்லியமாகி வரும் ரிசாத் அவர்களுக்கு நல்லது என்பது எமது தாழ்மையான அபிப்பிராயமாகும்.
ReplyDeleteசகோதரர் றிஷாட் அவர்களே,
ReplyDeleteஉங்கள் துணிச்சலுக்காக உங்களை பாராட்டாமல் இருக்கமுடியாது.
எனினும் சிலவிடயங்களில் மிகவும் அவதானமாகவும் உறுதியாகவும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.
1.விவாத தலைப்பு
நீங்கள் விவாதிக்கப்போகும் விடயத்தைவிட்டும் வேறுவிடயங்களுக்கு உங்களை திருப்பிவிடாமல் இருக்கவேண்டும்.எமோஷானல் ஆகி ஆத்திரப்பட்டோ அவசரப்பட்டோ பேசாமல் நிதானமாக விடயங்களை கிரகித்தபின் பேசவும்.
2.விவாத தரப்பு
இந்நாட்டின் பெரும்பாண்மை இன மக்களின் பாதுகாவலர்களான பௌத்த தேரர்களில் ஒருவருடன் விவாதிப்பதென்பது மிகவும் நுணுக்கமானதாக இருக்கவேண்டும் என்பதுடன் அவர்சார்ந்த மதத்தினையோ அம்மதம் சார்ந்த மக்களின் மனங்களையோ புண்படுத்திவிடாது அவர்களின் மனங்களை வென்றெடுக்கும் விதத்தில் பேசவேண்டும்.அத்துடன் இஸ்லாமிய மார்க்கத்தினை அவர்கள் வம்பிழுக்கலாம் அதிலிருந்தும் நீங்கள் விலகிவிடல்வேண்டும்.
3.பண்பு
அழகிய பண்பான வார்த்தைகளைக்கொண்டே விழியுங்கள்.அவரின் இருக்கைக்கு சரிசமமாக உங்கள் இருக்கையை அமைத்துக்கொள்ள வேண்டாம்.அவருக்கு தாழ்வாக அமைத்துக்கொள்ளுங்கள்;
4.நடுவர்
நடுவர் ஒருபோதும் உங்களுக்கு சார்பாக நடந்துகொள்ளவேமாட்டார் ஆகவே உங்களை அவர் குறுக்கு விசாரணை செய்வதனை அனுமதிக்கவேண்டாம் தவிர்த்துவிடுங்கள்.
5.நேரம்
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைமாத்திரம் கருத்தில்கொண்டு கருத்துக்களை ஆதாரத்துடன் முன்வையுங்கள்.
6.ஆளுமை
உங்கள் ஆளுமையை விவாதத்தில் விட்டுக்கொடுக்கவேண்டாம்.குறித்த நபர் தவிர்ந்த வேறுயாருடைய கேள்விகளுக்கும் முன்னிற்கவேண்டாம்.நாட்டுப்பற்றுடன் விவாதத்தை தொடங்கி ஒரேதேசம் ஒரே மக்களாக வாழ்வதனை நீங்கள் விவாத ஆரம்பத்திலும் முடிவிலும் பறைசாற்றுங்கள்,
உங்கள் எதிரிகள் சகட்டுமேனிக்கு விலாசுவார்கள் உங்கள் அரசியல் வாழ்வை இல்லாமலாக்குவதே அவர்களின் நோக்கமாகும் ,அவர்களையும் கவர்ந்துவிடக்கூடியவிதத்தில் அமைத்துக்கொள்ளுங்கள்.
எல்லாம்வல்ல இறைவன் உங்களுக்கு உதவவுவானாக.
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்.
@ Aslam Rauf! Very good points bro.hope he sees this and may Allah give him wisdom during the debate.
Deleteஅல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
ReplyDeleteSo keep the trust in Allah and go to the debate. May Allah make it easy and give you knowledge Mr Rishard
Aslam Rauf - Voicesrilanka
ReplyDeleteபயப்படவேண்டாம் இது ஒரு Setup தான்
Maashaa Allah. Yet another excellent piece of analysis by Dr. Anees. I do not see any hidden political aspirations in this post where the reality is absolutely exposed, and the role required to be played by Muslims in situations of this nature is very well defined. May Allah accept Dr. Anees' sincere intentions and efforts.
ReplyDelete