Header Ads



வசீம் தாஜூடீன் படுகொலை, சந்தேக நபர்களுக்கு "அரசியல் அடைக்கலம்" வழங்கிய VIP

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்க அரசியல் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் சந்தேக நபர் கைது செய்யப்படவிருந்த போதிலும் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் அழுத்தம் காரணமாக இவ்வாறு கைது செய்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத்திட்டம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது இந்த கைது மேற்கொள்ளப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர் 19ம் திகதியின் பின்னர் நிச்சயமாக கைது செய்யப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் அந்த வாக்குறுதி நிறைறே;றப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

No comments

Powered by Blogger.