Header Ads



Unp யுடன் டீல் போட்ட மஹிந்த, 15 வருடம் அதிகாரத்திலிருந்து நாமலை தலைவராக்க திட்டமிட்டார்

மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டு 13 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டதாக, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2004ம் ஆண்டு சபாநாயகர் ஒருவரை கூட நியமிக்க முடியாத அரசாங்கமே தம்மிடம் இருந்ததாகவும், பின்னர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியுடன் டீல் (ஒப்பந்தம்) ஒன்றை போட்டு 13 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டதாகவும் டிலான் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மஹிந்த புலிகளுடன் டீல் ஒன்றை போட்டதாக சிலர் கூறுவதாக இங்கு சுட்டிக்காட்டிய அவர், இதனால் வடக்கில் வாக்களிப்பது தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனினும் குறித்த டீல் பிரபாகரன் தோற்றதால் நல்ல டீலானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தந்தை மேலும் 15 வருடங்களுக்கு அதிகாரத்தில் இருந்தால் நாட்டின் தலைவராக நாமல் நினைத்திருந்ததாகவும் ஆனால் அது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தல்ல எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்

1 comment:

  1. Then why you support him to get the various ministry posts....? then what about your deal with him...?

    ReplyDelete

Powered by Blogger.