Header Ads



சிங்களவர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றி, பிரச்சாரம் செய்வதை தடுக்கவேண்டும் - நீதிமன்றத்தில் கோரிக்கை

பௌத்த மதத்தை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எந்த இடத்திலும் நிந்தனை செய்யவில்லை. தவறுதலாக பேசப்பட்ட ஒரு விடயத்திற்காகவே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாம் பேசிய குறித்த விடயம் மனிதன் என்ற வகையில் தவறுதலாக பேசப்பட்ட ஒன்றாகும். இதற்காக கடந்த காலங்களிலேயே நாம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து விட்டோம். நீதி மன்றத்திலும் வருத்தம் தெரிவித்துள்ளோம். இதனைத் தாண்டி எக்காரணம் கொண்டும் மஹாநாயக்க தேரர்களிடம் மன்னிப்புக் கோர முடியாது என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்று (10) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் பௌத்த மதத்தை நிந்தனை செய்தது என்று குற்றம் சாட்டி பொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு கொழும்பு, புதுக்கடை பிரதான நீதவான் நீதி மன்றத்தில் இன்று மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்பது தீவிரவாத அமைப்பாகும். இவர்களை பொது பல சேனா மாத்திரமன்றி சில முஸ்லிம் அமைப்புகளும் எதிர்க்கின்றார்கள். இவர்கள் புத்தரை அவமதித்துள்ளார்கள். ஆகவே இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அண்மையில் இவர்கள் நடத்திய குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு நிகழ்வில் வெளிநாட்டில் இருந்து கலந்து கொள்ளவிருந்த தீவிரவாதிகளில் ஒருவரை அஸாத் ஸாலியும் எதிர்த்தார். இவர்களின் சிங்கள மொழி பெயர்ப்பையும் வெளியிட வேண்டாம் என்றார். அத்துடன் இவர்கள் இஸ்லாம் பற்றி சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் அதற்கும் நீதி மன்றம் தடையுத்தரவு பிரப்பிக்க வேண்டும் என்று பொது பல சேனா தரப்பில் ஆஜரான சட்டத்ததரணி தனது வாதத்தை முன் வைத்தார்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்பது இலங்கையில் சட்ட யாப்புக்கு அமைவாக செயல்படும் ஒரு ஜனநாயக அமைப்பாகும். அதன் பிரச்சாரத்தை எவராலும் எக்காரணம் கொண்டும் தடை செய்ய முடியாது. அத்துடன் அஸாத் ஸாலி என்பவர் முஸ்லிம் சமுதாயத்தில் எவ்வித மரியாதையும் அற்ற, அநாகரீகமான, மக்களால் தூசுக்கும் கணக்கில் எடுக்கப்படாத ஒருவர். அவரை இந்த இடத்தில் ஆதாரம் காட்டி பேசுவது என்பது கேளிக் கூத்தான ஒன்றாகும். அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்பை வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்கு அஸாத் ஸாலிக்கோ, அவரைச் சார்ந்தவர்களுக்கோ எவ்வித அருகதையும் இல்லை. நாம் எமது காரியங்கள் அனைத்தையும் சட்டத்திற்கு உட்பட்டே செய்து வருகின்றோம், எமது மார்க்கப் பிரச்சாரங்களை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குனரத்த ஆகியோர் நீதி மன்றத்தில் தெரிவித்தார்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரத்தினால் நாட்டில் ஏதாவது பிரச்சினைகள், சிக்கல்கள் உண்டா? என கொழும்பு, குற்றத் தடுப்புப் பிரிவு (CCD) அதிகாரிகளிடம் நீதவான் கிஹான் பிலபிடிய கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினால் நாட்டில் எவ்வித பிரச்சினைகளோ, சிக்கல்களோ இல்லை என்று தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரியாழ், துணை தலைவர் சகோ. பர்சான், பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக், பொருளாளர் சகோ. ரிழ்வான், துணை செயலாளர் சகோ. ரஸ்மின் மற்றும் சகோ. தவ்ஸீப் அஹ்மத் ஆகியோர் வழக்கில் ஆஜரானார்கள்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன், மற்றும் மைத்திரி குனரத்ன உள்ளிட்ட குழுவினர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழக்கில் ஆஜரானார்கள்.

வழக்கின் மேலதிக விசாரனை 11.02.2016 ம் திகதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

14 comments:

  1. சிங்கலவர்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதை யாரும் தடை செய்ய முடியாது. பிரச்சாரம் செய்வது எந்த இயக்கமாக இருந்தாலும் சரியே. அப்படி செய்தால் அது ஜனநாயகமாக இருக்காது.ஆனால் இஸ்லாத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் சொல்லுவது போன்று இல்லாமல்( வாருடதிட்கு வருடம் புதிய சட்டங்களை ) சொல்லியும்,மாற்றியும் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
    நாம் இஸ்லாத்தை பேச்சளாவில் சொல்லிக்கொண்டு இருப்பதை விட செயலால் இஸ்லாத்தை பரத்துவது தான் சகாபாக்கள் நடை முறை படுத்தி காட்டினார்கள் அப்படி தான் இஸ்லாத்தை பரத்தினர்கள் அதிகமமான மக்கள் இஸ்லாத்தை ஏற்க வழி வகுத்தது. ஏன் இந்தியாவில் தற்போது நடைபெற்ற வெள்ள அனர்த்தமும் முஸ்லிம்களின் பங்களிப்பும்,சில இந்துவா வெறியர்களையும் வாயடைக்க செய்தது இதுதான் இஸ்லாம்.

    ReplyDelete
  2. Azath sally..did he represent muslim community. .need answers.

    ReplyDelete
  3. Inthakkootaththayum aadarippawarkalum irukkirarkhale. Azu thaan puthinam

    ReplyDelete
  4. If TJ knew they made a mistake as misintrepretation of Buddha then they have to apologise. If not we have to consider all their ideas are wrong becasue they never accept their mistakes.This is a critical problem we are facing for the last 3 decades

    ReplyDelete
  5. ஆசாத் சாலி அவருக்கு இருந்த சகல மரியாதைகளையும் இழந்துவிட்டார் என்பதை பெரும்பான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவரின் கருத்தை ஏக முஸ்லிம்களின் கருத்தாக பார்க்க முடியாது.இதை எல்லா மதத்தவர்களும் விளங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.பொது பல சென கூக்குரல் இடுவதை ஒட்டு மொத்த பெரும்பான்மை மக்களின் குரலாக நாம கருத்தில் எடுக்க முடியாது.

    ReplyDelete
  6. சிங்களவர்கள் மத்தியில் இஸ்லாம் பற்றி பிரச்சாரம் செய்வதை யாரும் தடுக்க முயலக் கூடாது, அதற்கு பூரண அனுமதி வழங்க வேண்டும். அதே போன்று இஸ்லாமியர்கள் மத்தியில் ஏனைய மதங்கள், கொள்கைகளையும் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும், யாரும் தடுக்கக் கூடாது.

    ஆனால், இஸ்லாமியர்கள் தங்களுக்கு மத்தியில் ஷியா கொள்கையை பிரச்சாரம் செய்வதை எதிர்ப்பது என்? அதே போன்று நான் கேள்வி கேட்பதை அனுமதிக்க மறுப்பது என்?

    ReplyDelete
  7. நீ ஒரு முழு முட்டாள்

    ReplyDelete
  8. எத்தனயோ தரமான கருத்துக்களுக்கு தடை போடும் ஜப்னா முஸ்லிம் இந்த முஸ்தபா ஜவ்பரின் படு முட்டாள்தனமான கருத்துக்களை மட்டும் எப்படி அனுமதிக்கின்றது?

    ReplyDelete
  9. நீங்கள் கேள்வி கேட்பதை மறுப்பது அவர்களின் பத்திரிகைச் சுதந்திரம் ( நீங்கள் வாய்கிழிய பேசம் Rights பொதுவானது)
    கேள்விகளையும் கேட்டு, சவாலும் விட்ட பின்னர் பதில் அளித்தால் " நான் வாசிக்கவிலை" என்று கோமாளித்தனமானதாக சொல்லிவிட்டு escape ஆகுவீர்ககள்.
    இதில் மாதிரி
    http://www.jaffnamuslim.com/2015/12/10000.html?m=1
    இஸ்லாமியர்கள் சீயா கொள்கை பிரச்சாரம் செய்வதை எதிரப்பது.
    அல்லாஹ் அதற்கு விடை கூறியுள்ளான். We know Islam is 100% correct and right. So need to follow anyone else.
    Al Quran



    (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
    [109:2]
    நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
    [109:3]
    இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
    [109:4]
    அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
    [109:5]
    மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
    [109:6]
    உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."

    ReplyDelete
  10. Mr. Nilavan... ISLAM is what Muhammed (sal) brought to all mankind from the TRUE ONE GOD who created you me and all in this universe.

    If SHIA brings messages that contrdict with what the Prophet brought.. We oppose it, since they lie. BUT If they bring their own religion and not use the name of Prophet Muhammed.. we have not problem. See Hindu people worship STONE and statues in place of the TRUE CREATOR.. But they do not say this is from Muhammed (saL) so we do not oppose them...But WE say to All Non-Muslims... GET to know that All of us are sons and daughters of ONE family ADAM and HAWWA. They were worshipping the TRUE ONE GOD who created them, this universe. So stay away from worshipping his creations such as STONE, STATUES, TREES, SUN, MOON, DEAD good/bad people (awliya as SHIA do) or any buliding .. in breif they are creation of the ONE TRUE GOD. Lean and Worshipp him alone.

    HOPE you understood... If GOD will.. HE will guide you before your death and enter you into his Paradise with other GOD worshippers.

    GOOD LUCK

    ReplyDelete
  11. பதிவும், கருத்தும் தமிழில் இருக்கும் பொழுது ஆங்கிலத்தில் வந்து கொட்டிவிட்டுப் போனால்???

    தமிழில் பதில் சொல்லுங்கள்.

    நீங்கள் உங்கள் மதம் உங்களுக்கு சரி என்று நினைப்பது போன்றே ஒவ்வொரு மதத்தவரும் நினைக்கின்றார்கள். திருடனின் மகன், "எனது தந்தை நல்லவர், வீட்டிலே எம்மோடு பாசமாக இருக்கிறார், அவர் எமக்கு போதும், அவர் நல்லவர்" என்று சொல்லிவிடுவதால் மட்டும் நல்லவர் ஆகிவிட முடியாது.

    இஸ்லாம் இறைவனின் மதன் என்பதெல்லாம் இஸ்லாத்தை ஏற்றவர்களின் நம்பிக்கையே தவிர, பொதுவான நம்பிக்கை அல்லவே. பொதுவான சட்டம் என்று வரும் பொழுது, தனிப்பட்ட மத நம்பிக்கையை மட்டும் வைத்து எப்படி உங்கள் செயலை நியாயப் படுத்தப் போகின்றீர்கள்?

    ReplyDelete
  12. நிலவன்! இஸ்லாம் யாரையும் எங்களை பின்பற்ற சொல்லி வற்புறுத்துவதில்லை.
    (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல் குர்ஆன்: 2.256)

    "(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்." (அல் குர்ஆன்:16.125)

    நிலவன் ஏன் நீங்கள் எந்த மத்த்தைச் சான்றவர் என்று கூற மறுக்கின்றீர்கள்?
    அல்லது நாத்திகனா என்று கேட்டால் அதற்கும் பதிலை காணம்.

    ReplyDelete
  13. திருடன் யார் நல்லவன் யார் என்பதை பிரித்தறிந்து அதில் நல்லவனாக வாழும் போதனையை இஸ்லாம் மாத்திரம் தான் தெளிவாக போதிக்கிறது இதை யாரும் பரிசோதித்து பார்த்து புரிந்து கொள்ளலாம் உண்மை எது பொய் எது என்று பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளும் தன்மை ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப் பட்டருக்கிறது

    ReplyDelete

Powered by Blogger.