SLMC யின் முன்னாள் கொள்கைபரப்புச் செயலாளர் ஆதம்லெப்பை (குணம் மாஸ்டர்) காலமானார்
அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினருமான எம்.ஏ.ஆதம்லெப்பை (குணம் மாஸ்டர்) செவ்வாய்க்கிழமை தனது 80 ஆவது வயதில் காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அக்கரைப்பற்று தைக்காநகர் மையவாடியில் இடம்பெற்றது.
பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரான இவர் நாட்டின் பல பாகங்களிலும் கல்விச் சேவை ஆற்றியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப காலத்தில் அக்கட்சியில் இணைந்து கொண்ட இவர் சிறிது காலம் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக பணியாற்றினார். ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபுடன் இணைந்து துணிச்சல்மிக்க பிராந்திய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
இவரது சேவையை பாராட்டி மறைந்த தலைவரினால் 'இலக்கியச் செம்மல்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர் எம்.ஏ.உதுமாலெப்பையின் சகோதரரான இவர் 5 பிள்ளைகளின் தந்தையாவார்.
Post a Comment