Header Ads



SLFP யில் அங்கம் வகிப்பதா, இல்லையா என்பதனை மஹிந்த பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் என்ற ரீதியில் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதா அல்லது கட்சியை விட்டு விலகி புதிய கட்சியொன்றை தொடங்குவதா என்பதனை மஹிந்த ராஜபக்ஸவே தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாட்டுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி தனியாக கட்சி ஆரம்பிக்கும் நியாயமான தேவை மஹிந்த ராஜபக்ஸவிற்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியாக கட்சி ஆரம்பிப்பது குறித்து மஹிந்த ராஜபக்ஸ இதுவரையில் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.