Header Ads



"Shameer Nistar நினைவாக..."

-Shaheemullah Iqbal-

Shameer Nistar எனது அஷாபீர் மாணவன், என்றுமே முகத்தில் ஒரு கபடமற்ற புன்முறுவல்..

அவருடைய வார்த்தைகளால் உலகத்தில் யாருமே தாக்கப்பட்டு இருக்க வாய்ப்பே இல்லை..

இஸ்லாம் விரும்பும் ஒரு மகனாக, மருமகனாக, சகோதரனாக, கணவனாக, நண்பனாக சமூகத்துக்கு ஒரு பண்புள்ள, அடக்கமான, அமைதியான மனிதமாணிக்கமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

இத்தனைக்கும் அவரால் உலகில் வாழக்கிடைத்த காலமோ மிகவுமே சொற்பமானது, அதிகம் பேசிக்கொண்டிருக்கும் பேச்சாளர் இல்லை, ஆனாலும் நாடுகடந்து வந்தாலும், கொஞ்ச காலம் பழகக் கிடைத்தாலும் உள்ளத்தில் மிக ஆழமாக இடம் பிடிக்கும் அளவிற்கு அவரிடம் நிறையவே காணக்கிடைத்தது அவரிடம் இருந்த இஸ்லாம் விரும்பும் அந்த அழகிய பண்பாடுகளின் நடைமுறை வடிவம் ஒன்று மட்டுமே என உறுதியாக நம்புகிறேன்..

"இன்னாலில்லாஹ்" என்று சொல்லி வழியனுப்பியும் கூட அவரின் இழப்பு ஒரு பேரிழப்பாக இருக்கிறது, ஆனாலும் அவர் விட்டுச்சென்ற படிப்பினைகள் ஏராளம்!

அதுதான் வாழ்க்கை என்ற அவகாசம் ஒருமுறை, சரிவர வாழ்ந்துவிட்டோம் என்றால் மரணித்த பின்னரும் அடுத்தவர்களின் உள்ளங்களில் நம்மால் வாழமுடியும் என்பதுதான் அந்தப் படிப்பினை..

அல்லாஹ் அவரை மன்னித்து ஏற்று சுவனத்தின் உயர்ந்த இடத்தில் வாழச்செய்வானாக!

அவரை இழந்து வருத்தப்படும் உள்ளங்களுக்கு பொறுமையையும் ஆறுதலையும் வழங்குவானாக, அவரின் நற்செயல்களின் மூலம் கவரப்பட்ட அவரின் நண்பர்களின் பண்பாட்டு மாற்றங்களை ஸதகதுல் ஜாரியாவாக கபூல் செய்துகொள்வாயாக.. ஆமீன்!

இப்படிக்கு கண்ணீர் நிரம்பிய கண்களுடன் விடைபெறும் உங்கள் அன்புச் சகோதரன்;

ஷஹீமுல்லாஹ் இக்பால்
லண்டன், UK

1 comment:

  1. اللهم اغفرله ورحمه وادخله الجنة

    ReplyDelete

Powered by Blogger.