Header Ads



முஸ்லிம்களை 'ஆசை காட்டி' மதம் மாற்ற முடியாது - RSS

முஸ்லிம்களை ஆசை காட்டி ஹிந்துக்களாக மாற்ற முடியாது, அதேநேரம் அவர்களுக்கு தண்டனை வழங்கி தாய் மதத்துக்கு திருப்ப முடியும் எனக் கூறியுள்ளான் 'ஆர்எஸ்எஸ்'ன் 'இந்திரேஷ்குமார்'

பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள இந்த தீவிரவாதி இந்திரேஷ்குமார், 'முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்' என்ற 'RSS'ன் 'முஸ்லிம்களுக்கான பிரிவின் தலைவனாக இருக்கிறான்.

இதன்மூலம் அவ்வப்போது சில முஸ்லிம்களை கூலிக்கு அமர்த்தி கூட்டம் போடுவதுடன், அதே கூட்டத்தில் முஸ்லிம்களை மிரட்டும் காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறான், இந்த இந்திரேஷ்குமார்.

நேற்றைய தினம் (13-12-2015), அயோத்தியில் நடந்த 'ஆர்எஸ்எஸ்' குண்டர்களின் கூட்டத்தில் பேசிய இந்திரேஷ்குமார், முஸ்லிம்களின் சமாதிகளில் வணங்கி வரும் ஹிந்துக்கள் தான் உண்மையான மத சார்பற்றவர்கள்.

ஹிந்துக்கள், முஸ்லிம் சமாதிகளில் வழிபடுவதைப் போல முஸ்லிம்கள் ஹிந்து தெய்வங்களை வணங்குவதில்லை என்று சொன்ன இந்திரேஷ்குமார்,

ஒரு காலத்தில் பசுவை வணங்கி வந்த முஸ்லிம்கள்(முன்னாள் ஹிந்துக்கள்), தற்போது அதனை அறுத்து சாப்பிடுவோம் எனக்கூறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

'கர் வாபசி' என்ற தாய் மதத்துக்கும் திரும்ப அழைக்கும் பணியில் ஈடுபடும்போது, அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறுவதற்கு பதிலாக, 'தண்டனை வழங்குவோம்' என்ற அச்சுறுத்தி மத மாற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளான், இந்திரேஷ்குமார்.

1 comment:

  1. This callous-minded person must understand that Muslims never ever prostrated themselves to anything other than the Almighty Allah under any circumstances, for love or money. This is merely a chimerical fantasy of RSS & its henchmen.

    ReplyDelete

Powered by Blogger.