PJ விவகாரத்தில் உலமா சபை + தௌஹீத் மோதலை சுட்டிக்காட்டும் பொது பலசேனா
பொதுபலசேனா போன்ற அமைப்புகளைத் தடை செய்வதற்கும் சிங்கள பௌத்தர்களை அழிப்பதற்காகவுமே தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் வழக்கு சட்டக் கோவையில் அரசாங்கம் திருத்தங்களைச் செய்யவுள்ளது என பொதுபலசேனா அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்தார்.
கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
‘இது வரலாற்றில் மிகவும் பயங்கரமான சட்டமாகும். இச் சட்டத்தின் மூலம் அரசியல் அமைப்புகளையும் தேசிய அமைப்புகளையும் கட்டுப்படுத்தி இல்லாமற் செய்ய முடியும். இது விஷம் கலந்த சட்டமாகும். இந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.
இனவாதம் மற்றும் ஏனைய மதங்கள் அவமதிப்புக்கு தண்டனை வழங்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எமது நாட்டில் இவ்வாறன சம்பவங்கள் இடம்பெறவில்லை நாட்டைத் துண்டாடுவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிறகு இவ்வாறான முயற்சிகள் ஏற்படாதிருக்க எந்தவித சட்டமும் இயற்றப்படவில்லை.
இந்தச் சட்ட மூலம் வேறு நாட்டின் ஆட்சியாளர்களின் ஆலோசனைக்கமைவாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் இரு சனப் பிரிவுகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டால் இந்தச் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கலாம். அப்படியென்றால் அண்மையில் தௌஹீத் அமைப்புக்கும் உலமா சபைக்கும் இடையில் இந்திய மார்க்க அறிஞர் ஒருவரின் வருகை தொடர்பில் கருத்து மோதல்கள் ஏற்பட அவர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் தொழிற்சங்க சுதந்திரம், அரசியல் சுதந்திரம் இல்லாமற் போகும். தற்போது 'இனம்' என்பதற்கு இலங்கையர் என்று எழுதும்படி அரசு கூறுகிறது.
முன்பு இனம் என்றால் சிங்களவர், முஸ்லிம், கிறிஸ்தவர் என்றே எழுதப்பட்டன. பாடசாலை புத்தகங்களிலிருந்து மதம் தொடர்பான பக்கத்தை இல்லாமற் செய்ய முயற்சிக்கப்படுகின்றன.
அரசியலமைப்பிலிருந்து பௌத்தத்தின் முக்கியத்துவம் இல்லாமல் செய்யப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது சிங்கள பௌத்தத்தை இந்நாட்டிலிருந்து அழித்து இலங்கையை அரபு குடியேற்ற அல்லது அமெரிக்க குடியேற்றமாக மாற்றும் முயற்சியாகும் என்றார்.
Very Good.now they have a subject to Talk.
ReplyDeleteபெட்ரோல் பொங்கும் நாட்ட விட்டுட்டு அரபிகள் வரமாட்டாங்க அந்த அளவுக்குப் பயப்பட வேண்டாம்
ReplyDeleteபாவம் பைதியம் நல்லா வேலை செய்கிறது
ReplyDelete