Header Ads



Oxford நிறுவனத்திற்கே ஆங்கிலம் கற்பித்த, இஸ்லாமிய மார்க்க அறிஞர்

-TMM-

சில தினங்களாக சமூக வலை தளங்களின் மலையாள பக்கங்களில் சிறப்பிக்க படுகிறார் மார்க்க அறிஞர் மெளலவி . அப்துல் நூர்.

மலப்புரம் மாவட்டம் செம்மாடு தாருல் ஹீதா அரபி பல்கலையில் மார்க்க கல்வி கற்று தேர்ந்த பின்னர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலையும் B.Ed, ம் தேர்வும் பெற்றவர். மார்க்க அறிஞர் மெளலவி . அப்துல் நூர்.

“Tips On English Pronounciation” என்ற தலைப்பிலான புத்தகம் தயாரிப்பிலிருக்கும் மெளலவி . அப்துல் நூர், ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியின் ஆன்லைன் பதிப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதை கண்டுபிடித்தார் தவறுகளை சுட்டிக்காட்டி Oxford நிறுவனத்திற்கு அனுப்பிய E-mail-ஐ பரிசீலித்த Oxford நிர்வாகம் தங்களது தவறை உணர்ந்ததோடு எட்டாவது பதிப்பில் சரியான வார்த்தைகளை வெளியிடுவதாக E-mail மூலம் பதில் தெரிவித்துள்ளனர்.

மெளலவி . அப்துல் நூர் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்றால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியது என்ற காலம் மலையேறி ஆக்ஸ்போர்டுக்கே ஆங்கிலம் கற்பிக்கும் ஆற்றல் மிக்கவாகளாக மார்க்க அறிஞர்கள் உருவெடுத்திருப்பது பாராட்டுக்கு உரியதே நாமும் பாராட்டுவோம்

7 comments:

  1. May Allah give him more knowledge!

    ReplyDelete
  2. Indiavil adigam padithavargal ulla state Kerala no 1

    ReplyDelete
  3. உலமா என்றவகையில் மௌலவி அப்துல் நூர் அவர்கள் கீழைத்தேய முஸ்லீம்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்.
    அவரது நீண்ட ஆயுளுக்கும் சிறப்பான சேவை தொடரவும் அல்லாஹ் அருள்புரிவானாக.
    இப்படிப் பட்டோரையும் நகைப்புக்கிடமாக்கும் வகையில்
    "நாங்களும் பேசுவமில்ல" என்று மிம்பர்களிலும்கூட "பொறுக்கி" English பேசி தமது மேதாவித்தனத்தை வெளிப்படுத்து வதாக எண்ணி ஒட்டுமொத்த சமூகத்தையும் கேவலப்படுத்தும் எமது மௌலிகள் திருந்துவார்களா?

    ReplyDelete
  4. நம்மை அறியாமல் நமக்கு நாமே அவமனாத்தை தேடிக்கொல்கின்றோம். ஒக்ஸ்போர்ட உட்பட எந்த டிக்ஷனரியின் எடிட் ஹிஸ்டரியை எடுத்துப் பார்த்தால், அது பல முறை திருத்த பட்டு இருக்கும், இது ஒன்றும் புதிய விடயம் அல்ல.

    ஆனால், ஒரு மெளலவி இப்படி செய்தார் என்று சொல்வதன் மூலம் நாம் சொல்ல வருவது என்ன? மெளலவி என்றாலே கல்வி அறிவு இல்லாதவர்கள், ஆனால் இவருக்கு மட்டும் கல்வி அறிவு இருக்கின்றது என்பதா?

    அதாவது, "இந்தக் கட்டுவாசியைப் பாருங்கள், இவன் காட்டில் இருந்து வந்திருக்கின்றான், ஆனால் இவனுக்கு வலது கையால் உண்ணத் தெரிந்து இருக்கின்றது" என்று சொல்வது போன்று இல்லையா? நமது விரலை எடுத்து நமது கண்ணை குத்திக்கொள்ள தேவையில்லை.

    ReplyDelete
  5. @Lanka Voice!I agree to your comment to a certain extent!. but தயவுசெய்து மௌலவிமார்கள் கோபிக்க வேண்டாம். பெரும்பாலான மௌலவிகலின் உலக அறிவும், பொது அறிவும், கொஞ்சம் கம்மி தான். ( Specially Moulavis From Asian Countries. maybe their education system Makes them to concentrate only on religious studies ). Maybe some Naleemis are an exception.

    ReplyDelete

Powered by Blogger.