ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டபடி நாளை O/L பரீட்சை நடைபெறும்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நாளை நடத்தாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நாளையதினம் இடம்பெறவுள்ள வேலை நிறுத்தத்தை முன்னிட்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பரீட்சைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறைக்கு அமைய அதனைப் பிற்போட முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதனால் திட்டமிட்ட நேர அட்டவணையின் படி நாளை பரீட்சைகள் இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment