தடை பட்டியலில் 'Live Events’ நிறுவனம்
பிரபல லத்தீன் கலைஞரான என்றீக் இக்லெசியாசுவின் கலைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ''Live Events’' நிறுவனத்தை, கொழும்பு மாநகர சபை, தடை பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்தக் கலை நிகழ்ச்சியின் போது, கொடுக்கப்பட வேண்டிய 29 மில்லியன் ரூபாய் களியாட்ட வரியை செலுத்தாததன் காரணத்தினாலேயே அந்நிறுவனம், தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. செலுத்தவேண்டிய களியாட்ட வரியை செலுத்தும் வரையிலும் அந்நிறுவனம், தடைப்பட்டியலிலிருந்து எடுக்கப்படாது என்றும் மாநகர சபை அறிவித்துள்ளது.
குமார் சங்கக்கார மஹல ஆகியோர் இந்ந நிறுவனத்தின் முக்கிய பங்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment