Header Ads



"தேர்தலை பிற்போடுவது, ஜனநாயக விரோத செயல்" JVP

அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் காரணமாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை பிற்போடுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டமைக்கு தமது கட்சி அதிருப்தி கொண்டுள்ளதாகவும் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக அரசாங்கத்திடம் ஒருமித்த கருத்து இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒருவித கருத்தையும், பிரதமர் பிறிதொரு கருத்தையும் முன்வைத்து வருவதோடு பல்வேறுபட்ட காரணங்களை முன்வைத்து தேர்தலை பிற்போடுவது ஜனநாயக விரோத செயல் என ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றகளுக்கான தேர்தலை ஒருவருடத்தில் நடாத்துவதாக அரசாங்கம் கூறியுள்ள போதும் 2016 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் தேர்தலை நடாத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 6 மாதங்களுக்கு பிற்போடுவது சிக்கல் நிலையை தோற்றுவிக்கும் என தெரிவித்துள்ள அவர் இது மக்களின் ஜனநாயக உரிமையை மீறுகின்ற செயல் என்பதால் இதற்கு மக்கள் விடுதலை முன்னணி முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் இருப்பதால் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலை காணப்படுவதாக ரில்வின் சில்வா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.