Header Ads



"ISIS விவகாரம்" முஸ்லிம்­களை சந்­தே­கப்­படமாட்டோம், சரி­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்போம்

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக சர்வதேச செயற்பாடுகள் அமைந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். சர்வதேச ரீதியில் புலிகளின் அழுத்தங்களும், ஏனைய பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களும் உள்ளன. அரசாங்கம் இவற்றைக் கவனத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பை பலபடுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றது.

எனவே இனி ஒருபோதும் நாட்டைச் சீரழிக்கும் வகையில் எவரது பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் நாம் இடம் கொடுக்கமாட்டோம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

இலங்­கையைச் சேர்ந்த 45 பேருக்கு ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­புள்­ள­தா­க வெளியாகியுள்ள புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 

இலங்கை தீவி­ர­வாத சூழலில் இருந்து விடு­பட்ட ஒரு நாடு. ஆயுத சூழலில் இருந்து நாம் விடு­பட்டு குறு­கிய காலமே ஆகின்­றது. அவ்­வாறு இருக்­கையில் மீண்டும் ஒரு ஆயுத சூழலை உரு­வாக்க இட­ம­ளிக்க முடி­யாது. அதேபோல் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் என்ற நிலைமை வரு­கையில் நாம் தனித்­த­னி­யாக எவர்­மீதும் குறை கூறாது ஒரு நாடு, எமது மக்கள் என்ற ரீதியில் சிந்­திக்க வேண்டும்.

இந்த அர­சாங்கம் பயங்­க­ர­வா­தத்தை தடுக்கும் முன்­னைய அர­சாங்கம் தடுக்­க­வில்லை என கூறிக்­கொண்டு இருக்­காது நாட்டின் அனை­வரும் இணைந்து செயற்­பட வேண்டும்.

மேலும் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக சர்­வ­தேச செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளது என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். சர்­வ­தேச ரீதியில் புலி­களின் அழுத்­தங்­களும், ஏனைய பயங்­க­ர­வாத அமைப்­பு­களின் அச்­சு­றுத்தல்களும் உள்ளன. அதை அர­சாங்கம் கவ­னத்தில் கொண்டு தேசிய பாது­காப்பை பல­ப­டுத்தும் வகையில் செயற்­பட்டு வரு­கின்­றது.

எனவே இனி ஒரு­போதும் நாட்டை சீர­ழிக்கும் வகையில் எவ­ரது பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கும் நாம் இடம் கொடுக்க மாட்டோம்.

மேலும் கடந்த காலத்­திலும் ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பின் கூட்­ட­ணியில் இலங்­கையை சேர்ந்த நபர்கள் உள்­ள­தாக தக­வல்கள் வெளி­வந்­தன. இப்­போதும் புல­னாய்வு பிரிவின் தக­வல்கள் அவ்­வாறு வெளி­யிட்­டுள்­ள­தாக தெரி­விக்கப் படு­கின்­றது.

எவ்­வாறு இருப்­பினும் நாட்டு மக்­களை பிள­வு­ப­டுத்தும் வகை­யிலோ அல்­லது இவ்­வா­றான கார­ணங்­களை வைத்து நாட்­டில் முஸ்லிம் மக்­களை சந்­தே­கப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்கும் வகை­யிலோ அர­சாங்கம் எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ளாது. அதேபோல் நாட்டில் புல­னாய்வு அதி­கா­ரி­களின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அமைய சரி­யான வகையில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்போம் எனக் குறிப்­பிட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வா­தி­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு தக­வல்கள் கிடைத்­துள்­ளதா என இரா­ணுவ ஊடகப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜெய­வீ­ர­விடம் வின­வி­ய­போது,

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வா­தி­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் புல­னாய்வு பிரிவின் தக­வல்கள் தொடர்பில் வெளிப்­ப­டுத்தும் அதி­காரம் எமக்கு இல்லை. எனினும் அவ்­வா­றான அச்­சு­றுத்தல் தொடர்ந்தும் உள்­ளது என தெரி­விக்க முடியும்.

ஆகவே எமது பாது­காப்பு அணி­யினர் தேசிய பாது­காப்பு விட­யத்தில் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றோம். எந்த சந்­தர்ப்­பத்­திலும் எமது இரா­ணுவம் தயா­ரா­கவே உள்­ளது.

மக்­களோ அல்­லது அயல் நாடு­களோ எமது நாட்டின் செயற்­பா­டுகள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை என தெரி­வித்தார்.

3 comments:

  1. ISRAEL is planning use the ISIS name and bring destruction to Muslims in Srilanka.

    BUT SriLankan Muslims and Muslism all around the world oppose the action of ISIS as unislamic and further it is a production of Isreal itself to harm Muslims around the world.

    Now they are trying to harm SriLankan Muslims. ISREAL should stop its unwanted action against to SriLankan Muslims by pouring oil for already burning situation.

    ReplyDelete
  2. Ella samuhathilum vilaie pohum karuppu adoogal undu vilaie kodutha vargall isis enru kathubavrgalay

    ReplyDelete
  3. Is there any bearing in regard to Mr. Ruwan wijeyawardena's comment and his meeting with Jews delegates of USA?

    ReplyDelete

Powered by Blogger.