Header Ads



சிரிய ஜனாதிபதியுடன், ISIS தீவிரவாதிகள் வர்த்தகம் செய்தனர் - அமெரிக்கா

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 50 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட பெறுமதியான எண்ணெய்யினை சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாட்டிற்கு விற்பனை செய்துள்ளதாக அமெரிக்க திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிரிய மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் பெரும் நிலப்பரப்பை தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், தாம் அங்கு மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் இஸ்லாத்தின் மேம்பாட்டிற்கே மேற்கொள்ளப்படுவதாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் உறுதியாக இருக்கின்றனர்.

அமெரிக்க தலைமையிலான நாடுகள் சிரியாவில் உள்ள சுணி குழுக்களின் இலக்குகளை குறி வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல்கள் மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ். இன் தலைவர்களை அழிப்பதுடன், அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்குமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிதியினை மட்டுப்படுத்தி யுத்தத்தை நலிவடைய செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரஷ்ய ஜெற் வாநூர்தி ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்திய போது, ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அதிக அளவிலான எண்ணெய் மற்றும் பெற்ரோலிய பொருட்கள் எல்லை கடந்து துருக்கிக்கு செல்வதாக தெரிவித்திருந்தார்.

அந்த விடயம் குறித்து தமக்கு பல புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.