Header Ads



முஸ்லிம் இளைஞர்கள் IS தீவிரவாதிகளாகின்றனர் - மைத்திரிக்கும், ரணிலுக்கும் இரகசிய அறிக்கை

முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாத மயப்படுத்தப்பட்டு ஐஎஸ் அமைப்பின்  ஆதரவாளர்களாக மாறிவருவதுகுறித்து  அரச புலனாய்வு  அமைப்பொன்று  அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்ம் அனுப்பபட்டுள்ள இரகசிய அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து இலங்கைக்கு இரு வெளிநாட்டு அரசாங்கங்கள் எச்சரித்துள்ள நிலையிலேயே இந்த அறிக்கையும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மோதல்கள் இடம்பெற்றுவரும் சிரியாவிற்குள் இலங்கையை சேர்ந்த 9 குடும்பங்களை சேர்ந்த 45 இலங்கையர்கள் சென்றுள்ளதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது,

துருக்கி எல்லைய கடந்தே இவர்கள் சிரியாவிற்கு சென்றுள்ளனர்,சிலர் பாக்கிஸ்தானையும் பயன்படுத்தியுள்ளனர், இவர்களில் சிலர் மோதல்களில் ஈடுபட்டுள்ள அதேவேளை வேறு சிலர் விநியோகப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஐஎஸ் ஆதரவாளர்கள் கிழக்கு மாகாணத்திலேயே அதிகமாக காணப்படுகின்றனர் என்ற கருத்தை பொய்யாக்கும் விதத்தில் இலங்கையிலிருந்து குருநாகல், கண்டி மற்றும் கொழும்பின் புறநகர் பகுதியை சேர்ந்தவர்களே சிரியாவிற்கு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

6 comments:

  1. I argali slat juju aaha pohavilai panathuku pokiraargal

    ReplyDelete
  2. யா அல்லாஹ் முஸ்லிம் களைபாதுகாப்பாயாக

    ReplyDelete
  3. அலசி ஆராயாமல் முடிவடுக்க முடியாது

    ReplyDelete
  4. Zionists களின் கைவரிசைகளை இலங்கையிலும் காட்ட ஆரம்பிச்சிட்டான்யா!!
    LTTE ஆல் ஏழைச்சிறுவர்களையெல்லாம் தீவிரவாதிகளாக மாற்றிக்கொண்டிருந்த போது அறிக்கைகளை விடாதவர்கள் அல்லது அதற்காக ஒன்றுமே செய்யமுடியாதவர்கள். இப்ப இப்படியான போலி அறிக்கைகளை விடுகிறார்கள். யாரும் கேள்வி கேட்காமல் நம்புவார்கள் என்பதாலோ?
    நம்மவர்கள் இந்தமாதிரி போவதென்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். 50 ரூபா சம்பாதித்து 500 ரூபாய்க்கு Shirt போட்டு Show காட்ட ஆசைப்படுவார்களே தவிர இந்தமாதிரி ISIS இல் இனைவார்கள் என்பது கேள்விக்குறி.

    ReplyDelete
  5. மற்றது ISIS க்கு support பன்னும் அளவுக்கு நம்மவர்கள் மடையர்களாக இருக்க வாய்ப்பில்லை.

    ReplyDelete
  6. இவங்களுக்கான அழிவை இவங்களே தேடிக்கொள்கிறார்கள்
    "தங்கள் சமுகம் செய்யும் தவறுகளுக்கு திருந்த சந்தர்ப்பம் வழங்காது பொத்தம் பொதுவாக மற்றவர்களை விமர்சிப்பதும் பழிசுமத்துவதும் இஸ்லாமின் தக்கியா மொடல்"

    ReplyDelete

Powered by Blogger.