IS பயங்கரவாதிகளை வீழ்த்த, வெளிநாட்டுப் படையினரின் உதவி தேவையில்லை - ஈராக்
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை வீழ்த்த, தங்களுக்கு வெளிநாட்டுப் படையினரின் உதவி தேவையில்லை என இராக் அதிபர் ஹைதர் அல்-அபாதி கூறினார்.
இராக்கில் ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் ஈடுபட கூடுதலாக ராணுவ வீரர்களை அனுப்பவிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அல்-அபாதி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஐ.எஸ். பயங்கரவாதிகளை வீழ்த்த இராக்கிய வீரர்களுக்கு வெளிநாட்டுப் படையினர் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கினாலே போதும்.
வெளிநாட்டுப் படையினரே இங்கு வந்து சண்டையிட வேண்டிய தேவையில்லை என்றார் அல்-அபாதி.
Post a Comment