ஆபத்தான நிலையில் சிறிலங்காவின் பொருளாதாரம் என IMF கூறியதால், ஆத்திரப்படும் அரசாங்கம்
சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கை தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்காவின் பொருளாதாரம் ஆபத்தான நிலையை நோக்கிச் சென்ற கொண்டிருப்பதாக, அனைத்துலக நாணய நிதியத்தின் கொழும்பிலுள்ள பணியகம் தெரிவித்திருந்தது.
வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை பகிரங்கமாக விமர்சித்து அனைத்துலக நாணய நிதியத்தின் கொழும்பிலுள்ள பணியகம் கருத்து வெளியிட்டிருப்பது அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வொசிங்டனில் உள்ள அனைத்துலக நாணய நிதியத்தின் தலைமையகத்துக்கு, அதன் கொழும்பு பணியகத்தின் செயற்பாடு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு ஒன்றை செய்யவுள்ளது.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளார்.
Post a Comment