Header Ads



யோஷித்தவுக்குச் சொந்தமான சிங்ஹ Fm ஒலிபரப்பை நிறுத்தியது, Unp யின் முக்கியஸ்தர் கொள்வனவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாம் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவுக்குச் சொந்தமான சிங்ஹ எப்.எம் வானொலி தனது ஒலிபரப்புக்களை நிறுத்தியுள்ளது.

அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் சிங்கள மொழி வானொலிகளில் தரமான நிகழ்ச்சியை வழங்கிய இந்த வானொலி கடந்த 23ம் திகதியுடன் தனது ஒலிபரப்பை நிறுத்தியுள்ளது.

குறித்த வானொலிக்கு உரித்தாக இருந்த அலைவரிசைகளை தற்காலிகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.

மிக விரைவில் புதுப் பெயர் ஒன்றுடன் வானொலிச் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜபக்ஸ குடும்பத்தினர் இதற்கு முன்னும் தங்களுக்குச் சொந்தமான ரிவிர மீடியா நிறுவனத்தைக் கைமாற்றியிருந்தனர்.

குறித்த ஊடக நிறுவனம் ரிவிர சிங்களப் பத்திரிகை மற்றும் தி நேசன் ஆங்கிலப் பத்திரிகைகளை வெளியிட்டு வருகின்றது.  அத்துடன் யோஷித்தவுக்குச் சொந்தமான இன்னொரு ஊடக நிறுவனமான சீஎஸ்என் தொலைக்காட்சியை விற்பனை செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் குறித்த நிறுவனம் மேற்கொண்டுள்ள மோசடிகள் தொடர்பான வழக்கு முடிவடையும் வரை சீஎஸ்என் நிறுவனத்தை விற்கவோ, முகாமைத்துவத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளவோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. How yositha earned money and invested on this singhe FM and CSN? There is no any investigation?

    ReplyDelete

Powered by Blogger.