அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கு சதித்திட்டம் - CID எச்சரிக்கை, மைத்திரிக்கும் அறிக்கை போனது
2016ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பல்வேறு வழிகளில் சீர்குலைப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரவினர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒத்துழையாமை நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கத்தின் திட்டங்களை சீர்குலைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, புலனாய்வு பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளும் குழுக்களும் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்தின் ஊடாக இந்த ஒத்துழையாமை சூழ்ச்சித் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சில உறுப்பினர்கள் கிராம ரீதியில் தெளிவூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுத்து சூழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்த முயற்சிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நேரத்திற்கு வேலை என்ற போராட்டத்தை ஆரம்பித்து அதன் பின்னர் பாரியளவில் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த சூழ்ச்சித் திட்டம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான சவால் நிலைமைகளில் அதனை எதிர்நோக்க அமைச்சர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் இவ்வாறு சூழ்ச்சித் திட்டத்தை சில அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Some politicians and some unknown groups are doing plots against the government but what is doing our president.
ReplyDelete