Header Ads



வசீம் தாஜுதீன் கொலை, தெரிந்த அனைத்து தகவல்களையும் CID க்கு வழங்கிய யசாரா

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் தொடர்பாகவும், யோஷித ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்துடன் இருந்த தொடர்புகள் குறித்தும் தான் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலமொன்று வழங்கியுள்ளதாக யசாரா அபேநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவு விடுத்த அறிவிப்பின் பிரகாரம் தான் அங்கு சென்று தெரிந்த அனைத்து தகவல்களையும் வழங்கியதாகவும், வசீம் தாஜுதீன் மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் தொடர்பாகவும், தாஜுதீனின் மரண செய்தி தெரிந்து கொண்ட விதம் மற்றும் அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பு குறித்து தன்னிடம் கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் குறித்த கொலை தொடர்பான பல சாட்சியங்கள் காணப்படுவதாகவும் அவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள தன்னிடம் இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாகவும் வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு யசாரா அபேநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.