றிசாத் விவாதம் செய்யமுன் Call எடுத்த மைத்திரி, விவாதத்தின் பின் புகழ்ந்தார்..!
வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும், சாகல தேரருக்கும் இடையே ஹிரு தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றதை நாம் அறிவோம்..!
அந்த விவாதத்தை தடுத்துநிறுத்த பல உயர்மட்டங்கள் முயற்சித்ததையும் ஜப்னா முஸ்லிம் இணையம் பகிரங்கப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் 28-12-2015 திங்கட்கிழமை அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத்திற்கு சில தடவைகள் தொலைபேசி அழைப்பெடுத்த விடயம் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்தது.
குறித்த விவாதத்தில் றிசாத் பதியுதீனை பங்குபற்றாமல் இருக்கச்செய்ய முயற்சி மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதியிடமிருந்து இந்த தொலைபேசி அழைபுக்கள் சென்றிருக்கலாமென கருதப்படுகிறது.
அதேவேளை 29-12-2015 செவ்வாய்கிழமை காலை வேளையில், அமைச்சர் றிசாத்தின் அமைச்சு பற்றிய நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரி பங்கேற்றுள்ளார். இதன்போது தாம் றிசாத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்த எடுத்த தகவலை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் தனக்கு நெருக்கமானவர் என்றும், கடந்த காலங்களில் அவருக்கு வழஙகப்பட்ட அமைச்சை செவ்வனே செய்ததாகவும், தற்போதும் அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சை திறம்பட வழிநடத்துவதாகவும் புகழ்ந்துள்ளார்.
அத்துடன் தாம் அமைச்சர் றிசாத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால குறிப்பிட்டதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது.
அத்துடன் தாம் அமைச்சர் றிசாத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால குறிப்பிட்டதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது.
தலைவர் அஸ்ரப் அவர்கள் பிக்கு ஒருவருடன் விவாதத்துக்கு போகு முன்பு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவும் அஷ்ரப் அவர்களை பிக்குவுடன் விவாதத்துக்கு போக வேண்டாம் என்று ஆலோசனை வழங்கினார். விவாதம் முடிந்து தலைவர் அஷ்ரப் அவர்கள் வீடு செல்வதற்கு முன்பே அஷ்ரப் அவர்களுக்கு call எடுத்து பாராட்டுக்களையும் மகிழ்சியையும் தெரிவித்திருந்தார். இதே பாணியை ரிசாத் அவர்களும் பின் பற்றி ஒரு மறைந்த தலைவர் அஷ்ரப்புக்கு நிகரான தலைவர் என்று கூறுவதட்கு முயற்சிப்பதாகவே தெரிகிறது.
ReplyDeleteஎனக்கு நினைவிருக்கிறது கடந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ரிசாத் பதுர்தீன் அவர்களை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் இதே மாதிரி அச்சொட்டாக புகழ்ந்து கூரியிருந்தார். தலையங்கத்தில் கூறியவாறு விவாதம் பற்றி ஜனாதிபதி அவர்கள் ரிசாத் அவர்களுக்கு வாழ்த்தியதாக உள்ளடக்கத்தில் இல்லையே?????
செய்திகளும் கருத்துக்களும், மக்களுக்கு உண்மையை யதார்த்தத்தை கூறுவதாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்பலாம்.
தலைவர் அஷ்ரப் அவர்களின் ஆளுமையும் விவாதமும் வேறு, ரிசாத் அவர்களும் அவரது விவாதமும் வேறு.
Policies is a game that no friends & no enemies
ReplyDeleteIn Politics Yesterday's friend is today's enemy. Today's enemy will be tomorrow's friend! But all of them are enemies of our nation.
ReplyDeleteஎத்தனை காலத்திற்குத்தான் இறந்தவர்களைப் பற்றிப் புகழ்பாடிக்கொண்டு இருப்பவர்களின் திறமைகளைக் கண்டுகொள்ளாதிருக்கப்போகின்றோம்..?
ReplyDeleteENGAL SAMUZAYATTIN PALAKKAME ADUTTAWANUDAYA KURAIGALAI THONDITH THONDI ARAIVAZU ALLAHTHAN PAZUKAKKAVENDRUM,AHIRATTIL ENTHA MANIZANUDAIYA KURAIYAI KOORIYAVANUKKU AWAR MANNIKAZAVARAI ALLAHVUM MANNIKKKA MATTAN.
ReplyDelete