சுதந்திரக் கட்சி தனது, அப்பாவினுடையதென நாமல் நினைப்பது தவறு
நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு இணங்க செயற்படுவாராயின் அவருக்கு எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவம் காத்திருப்பதாக கட்சி செயலாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா நேற்று தெரிவித்தார்.
என்றாலும் நாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது அப்பாவினுடையது என்ற எண்ணத்துடன் அவர் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவது தவறானது என்றும் அமைச்சர் கூறினார். ஸ்ரீல. சு. க. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஸ்ரீல. சு. க. டீல் அடிப்படையிலேயே ஐ. தே. க.வுடன் இணைந்து செயற்படுவதாக ஊடகங்களில் வெளியான கருத்து தொடர்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்படி கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தது முதல் ஸ்ரீல. சு. க. வின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமையவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி ஐ. தே. க.வுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பது மத்திய செயற்குழுவின் தீர்மானம் ஆகும். இங்கு எந்த இரகசிய டீலும் இல்லையென்பதனை நாமல் எம்.பி. புரிந்துகொள்ள வேண்டும் என்றார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது, அரசியலில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவை தவிர அனைவரும் டீல் செய்துள்ளனர்.
அதில் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை ஸ்ரீல. சு. கவில் இணைத்துக் கொள்ள நாமல் ராஜபக்ஷவும் டீல் செய்தார்.
ராஜபக்ஷ பரம்பரை இரத்தக்கறை படியாதது. அரசியலுக்கு தகுதிவாய்ந்தது.
அப்பா ஜனாதிபதியாக இருந்தபோது எம்.பியானதன் விளைவில் நாமல் எம்.பிக்கு அரசியல் ஆழம் புரியாமல் போய்விட்டது.
Post a Comment