Header Ads



பாராளுமன்றத் தேர்தலில் மைத்திரி, பிரதமர் வேட்பாளராக போட்டி..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020ம் அண்டு பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் வேட்பாளராக போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

தாம் அரசியலிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் சமூக செயற்பாடுகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என அவர் மீளவும் உறுதியளித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அர்த்தப்படாது எனவும அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து தாம் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளராக போட்டியிட்ட போதும் மிக நீண்ட காலத் திட்டங்களை வகுக்கவில்லை எனவும், தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்வதே தமது நோக்கமாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மைத்திரிக்கு ஆதரவான சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலில் மைத்திரியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

4 comments:

  1. If the president maithri would implement all his promises including FREE motorcycle for field officers,

    he would be the executive person for Sri Lanka forever.

    because we actually enjoying the good governance in his period

    ReplyDelete
  2. So, you need only free motorcycle...you never mind the public problems...if any...??

    ReplyDelete
  3. Yes, motorcyle is very nice, running very fast!

    ReplyDelete
  4. Good-governance is a fantasy. The So-called good governance had already breached its promises with overlong ministries.

    ReplyDelete

Powered by Blogger.