இணைய வேகம் குறைக்கப்படாது, அதிகரிக்கவே அரசாங்கம் நடவடிக்கை - ஹரீன்
இணையத்தின் வேகம் குறைக்கப்படாது என டிஜிட்டல் உட்கட்டுமானம் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டுவிட்டர் தகவல் ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இணையத்தின் வேகத்தை மேலும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேம்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக வேகத்தில் மாற்றங்கள் காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment