எந்தவொரு மதமும் இன்னுமொரு மதகோட்பாடுகளை, மூழ்கடிக்க இடமளிக்க முடியாது - ஜனாதிபதி
சமூகத்தில் எந்தவொரு மதமும் இன்னுமொரு மதத்தை கட்டுப்படுத்தவோ கோட்பாடுகளை மூழ்கடிக்கவோ அல்லது பலவந்தமாக புகுத்தவோ இடமளிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகவே காணப்படுவதாகவும் மதங்களின் அடையாளங்கள் மக்கள் மத்தியில் காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பில் அமைக்கப்பட்ட 16ஆவது பெனடிக் கல்வி நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியிலும் இனங்கள், மதங்கள், மொழிகள் போன்று அனைவருக்கும் மதத்துக்குரிய அடையாளங்கள் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்களின் மத மற்றும் கலாசார அடையாளங்களும் மொழிக்குரிய அடையாளங்களும் அவர்களின் வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான காராணியாக அமைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி இன்று முழு உலகையும் ஒரே கிராமமாக மாற்றியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மனித சமூகத்தின் இருப்பை உரிய முறையில் பேணுவதற்கும் தனிமனித வாழ்க்கைக்கும் அறிவும் அனுபவமும் உதவி புரியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அறிவைப் பெற்றுள்ள ஒரு சாரார் சமூகத்தை வழிநடத்துவதற்கு அதை பயன்படுத்துவதோடு இன்னுமொரு சாரார் உலக அழிவின் தேவைக்காக அந்த அறிவைப் பயன்படுத்துவதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச விஜயங்களில் கோமாளித்தனம் பண்ணி பெற்றுக்கொள்ளும் பிரபல்யத்தை, தானும் ஏதாவது பண்ணிப் பெற்றுக்கொள்ள இலங்கை அதிபர் முயல்கின்றாரா?
ReplyDeleteஒரு மதத்தின் பிரச்சாரம், வணக்கங்கள் இன்னொரு மதத்திற்கு எதிராகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு இந்து மதத்தின் சிலை வணக்கம் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது, இஸ்லாமிய மதம் சிலையை வணங்குவதை பெரும் பாவம் என்று பிரச்சாரம் செய்கின்றது.
ஜனாதிபதி சொல்வதை செய்வதாக இருந்தால், பல மதங்களை வெட்டி, சீவி, செதுக்கி, புது வடிவில் கொண்டுவர வேண்டும்.
Mr.Nilaval Marks The President Talking About The Peace Not Your Religion or My Religion If you Don't Understand News Don't Read Pls
ReplyDelete