"இவர்களை விட, இடி அமீன் நல்லவர்"
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் 4 இராணுவ அதிகாரிகளும் குறித்த கொலையுடன் எவ்வித தொடர்பும் இல்லாதவர்கள் என தூய்மையான ஹெல உறுமைய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை முடக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் சூட்சமமான சதித் திட்டங்களில் இதுவும் ஒன்றெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தூய்மையான ஹெல உறுமையவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எமது நாடு இன்று மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனால் எமது நாட்டை காக்க உயிர் தியாகம் செய்த இராணுவத்தினர் இன்று சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் காட்டிக்கொடுக்கப்படுவது வழமையானதொன்றாகிவிட்டது.
நான் சில நாட்களுக்கு முன்னர் பரகீத் எக்னெலிகொட கொலை விவகாரம் தொடர்பில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளான சம்மி கருணாரத்ன , பிரபோத வீரசேகர ,சார்ஜன் மேஜர் உபசேன, கோப்ரல் ரூபசேன ஆகியோரை சிறையில் சந்தித்திருந்தேன்.
அதன் போது அவர்கள் தாம் அப்பாவிகள் என்றும் கொலை பற்றி தாம் எவ்வித உண்மைகளையும் அறியவில்லை என்றும் தெரிவித்தனர். ப்ரகீத் எக்னெலிகொட என்பவரை தாம் கண்ணால் கண்டதும் இல்லை என தமது ஆதங்கத்தை தெரிவித்தனர்.
இவர்களின் கதை சோகமானது. அத்துடன் பயங்கரமானதாகும். புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவான டொஸி அமைப்பின் சிங்கள புலிகளுடன் தொடர்புகளை பேணுவதற்கு பொறுப்பாகவிருந்த தவேந்திரன் என்பவர் இராணுவத்திடம் சரணடைந்த போது அவரிடமிருந்து புலிகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொறுப்பு தற்போது கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டிருந்தது.
இதன் போது சிங்கள புலிகளில் ஒருவரான பி.ரஞ்சித என்பவரை பிரகீத் எக்னெலிகொட என ஏற்றுக்கொள்ளுமாறு குறித்த இராணுவ அதிகாரிகளுக்கு அரச தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த அதிகாரிகளுக்கு ஒவ்வொருவரும் எவ்வாறு சாட்சியம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நால்வருக்கும் கொடுக்கப்பட்டுள்ள கதைகள் அனைத்தையும் எடுத்துப்பார்க்கும் போது முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை முடக்க வைக்கும் அரசாங்கதின் தெளிவாகிறது. இவர்கள் நாலவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லை. அவர்கள் சாட்சியம் அளிக்க வேண்டிய விடயம் தொடர்பிலான ஆவணங்களை தாமே தயாரித்தாக பிரதி பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இவர்கள் எவ்வித அடிப்படை குற்றங்களையும் செய்யாத நிலையில் கைது செய்யப்படுள்ளனர் என தெரியவந்துள்ளது.மேலும் அவர்களின் குடும்பத்தினரும் தொலைபேசி வாயிலாக மிரட்டப்படுகின்றனர். இவ்வாறான செயல்களினால் அரசாங்கத்தின் துஷ்ட நோக்கங்கள் இரண்டு வெளிப்படையாகின்றன.
கோத்தபாய ராஜபக்ஷவின் கௌரவத்தை அரசாங்த்தினால் சகித்துக்கொள்ள முடியாமையினால் அவருக்கு சேறு பூச முயற்சிக்கப்படுகின்றது. அத்துடன் அரசாங்கம் ப்ரகீத் எக்னெலிகொடவின் கொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றமை வெளிப்படையாகின்றது.
அதனால் இந்த அரசின் அமைச்சர் ஒருவரால் ப்ரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.நாம் இன்று அதிகௌரவம் வழங்க வேண்டியவர்களை அரசாங்கம் காட்டிக்கொடுப்பது எதற்காகவென்று கேள்விக்குறியாகவே உள்ளது.
அவர்களை மிருகங்கள் போன்று வேட்டையாடி தமது தனிப்பட்ட அரசியல் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்தை கேட்கிறோம் இல்லாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் எதிர்ப்பர். முன்னர் சந்திரிகா அரசும் இது போன்று செயற்பட்டதையும் மறந்துவிடக்கூடாது.
இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இவர்களை விட இடி அமீன் நல்லவர் என்றே கூற வேண்டும் இராணுவத்தினை தாக்கிவிட்டு அரசாங்கம் நிலைக்கும் என்ற கனவில் அரசாங்கம் செயற்பட கூடாது என்ற அறிவுறுத்தலையும் விடுக்கின்றோம் என்றார்.
But all are better than you & your gang
ReplyDeleteAi fool, if that is wrong, you can appeal the case in the court on behalf of them.
ReplyDeleteU visited for the drama ha ha Mr.pichakran
ReplyDeleteIdi amin is better than u australian dollar kallan
ReplyDelete