உலக சந்தையில், மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி - இலங்கையில் விலையை குறைப்பதில் சிக்கல்
உலக சந்தையில் மசகெண்ணெய் விலையில் ஏற்படுகின்ற விலை வீழ்ச்சியின் லாபத்தை மக்களுக்கு வழங்குவதற்கு, புதிய விலை சூத்திரம் துணை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிய எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயு தொடர்பான அமைச்சர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் தற்போது மசகெண்ணெ பீப்பா ஒன்றின் விலை 40 டொலர்களுக்கும் குறைவாக நிலவுகிறது.
எனினும் இதன் லாபம் நாட்டுக்கு மக்களுக்கு வழங்கப்படுவதில் இதுவரையில் சிக்கல் இருந்தது.
இதனை தீர்க்கும் வகையில் புதிய விலை சூத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சூத்திரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று, அமைச்சர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார்.
All govarments cheeting in this fuel prize
ReplyDelete