Header Ads



"கால்களை நக்கவோ, அசிங்கங்களை துடைக்கவோ விரும்பவில்லை"

ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு இடமளிக்கப்படாது என அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல அபேகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பேர்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சக்கள் ஆட்சியிலிருந்து சென்றாலும் அவர்களது அரசாங்க முறைமை தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. எதிர்காலத்தில் அதனையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய அரசாங்கம் 2020ம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருக்கும். அதற்கான முழு ஆதரவினையும் நாம் வழங்குவோம்.

கடந்த ஆட்சியாளர்களின் கால்களை நக்கவோ அல்லது அவர்களது அசிங்கங்களை துடைக்கவோ விரும்பாத காரணத்தினால் அன்று அரசாங்கத்தை விட்டு விலகினோம்.

தற்போதைய அரசாங்கத்தை 2020ம் ஆண்டு வரையில் முன்னெடுப்போம். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததனைப் போன்று, இந்த அரசாங்கத்தை கொண்டு நடாத்த முழு அளவில் ஆதரவளிக்கப்படும்.

தற்போது நாட்டில் நிலவி வரும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பணிப் புறக்கணிப்புக்கள் கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் ஏற்பட்டதாகும்.இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

மஹிந்த ராஜபக்சக்கள் மீளவும் ஆட்சி அதிகாரத்தில் ஏற இடமளிக்கப்படாது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.