மைத்திரியும், ரணிலும் ஒதுங்குவார்களா..?
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடவடிக்கைகளில் இருந்த ஒதுங்கி சுயாதீனமாக செயற்படுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தேர்தலில் கிராம மட்ட கட்சியின் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை இரண்டாம் நிலை தலைவர்களுக்கு வழங்குவது மிகவும் பொறுத்தமானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் தத்தமது கட்சிகளில் தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக தலையிடுவது கட்சிகளின் உறுப்பினர்களிடம் மட்டுமல்லாது கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியலும் மோதல் நிலைமையை ஏற்படுத்தக் கூடும் எனவும் அந்த அமைச்சர்கள் எடுத்துக்கூறியுள்னர்.
மேலும் ஜனாதிபதியும் பிரதமரும் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கட்டியெழுப்பியுள்ள தேசிய அரசாங்கத்திற்கும் கெடுதியான அழுத்தங்களை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Post a Comment