அமெரிக்க இராஜதந்திரிகள், இலங்கையை நோக்கி படையெடுப்பது ஏன்..?
அமெரிக்க இராஜதந்திரிகளின் இலங்கைக்கான தொடர் விஜயங்கள் சந்தேகத்துக்குரியவை. எனவே, அரசு இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க இராஜதந்திரிகளின் தொடர் விஜயங்கள் குறித்து மஹிந்த அணியினர் விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், ஜே.வி.பியின் கருத்துக்களை வினவியபோதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசு மேற்கத்தேய நாடுகளின் சார்பு அரசியலையே மேற்கொண்டு வருகின்றது. எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விஜயத்தையோ அல்லது சர்வதேச இராஜதந்திரிகளின் இலங்கை விஜயத்தையோ எம்மால் விமர்சிக்க முடியாது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச தரப்பினர் வருகை தருவது பெரிய விடயம் இல்லை.
ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜதந்திரிகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளின் விஜயம் சற்று அதிகமாகவே உள்ளது.
இலங்கையில் அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன, எவ்வாறான உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது தொடர்பில் அனைவர் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே, இந்த விவகாரங்கள் தொடர்பில் அரசு தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும். மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகத்தை அரசே நிவர்த்திக்க வேண்டும் என்றார்.
SL.irukum thanga maligalil thangam kootto tonnu kottuthu allikittu poga poraan vakkilam velinaatil savaran sl.masusan
ReplyDelete