பலஸ்தீன் சம்பந்தமாக குத்பா உரை நிகழ்த்துங்கள் - ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
இவ்வார ஜுமுஆவை பாலஸ்தீன் சம்பந்தமாக அமைத்துக்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கதீப்மார்களிடம் வேண்டிக்கொள்கிறது.
யூதர்கள் நபிமார்களின் பரம்பரையிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அல்லாஹ்வுக்கு மாற்றம் செய்து நபிமார்களை கொலை செய்ததன் காரணமாக சபிக்கப்பட்டார்கள்.
மேலும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிஃமத்துக்களும் பறிக்கப்பட்டன.
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட பைத்துல் மக்திஸ் யஹுதிகள், கிறிஸ்தவர்கள் மற்றும் மஜுஸிகள் வசம் கைமாறிமாறி இருந்தது.
இறுதியாக ஹழ்ரத் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் பைத்துல் மக்திஸ் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. நீண்ட காலம் வரை முஸ்லிம்களின் கைவசம் இருந்த பைத்துல் மக்திஸ், முஸ்லிம்களின் கருத்து மோதல்களாலும் மற்றும் பாவங்கள் அதிகரித்தமையாலும், அந்நியர்களின் சூழ்ச்சிகளினாலும் யஹுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. இது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாரிய ஒரு பின்னடைவாகும்.
முஸ்லிம்கள் இதைமீட்டெடுப்பதற்காக தற்போது பல தியாகங்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்;. என்றாலும், அது இதுவரை கைகூடவில்லை. குறிப்பாக பலஸ்தீனில் வாழும் முஸ்லிம்கள் நாளாந்தம் பலஉயிர் இழப்புக்களையும், பொருட் சேதங்களையும், இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஒரு உடல் போன்றவர்களே உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் முஸ்லிம்களுக்குஒருசேதம் அல்லது அழிவு ஏற்பட்டு விட்டால் நாமும் அக்கவலையில் பங்கு எடுக்க வேண்டும்.
இலங்கைவாழ் முஸ்லிம்களாகியநாம் பைத்துல் மக்திஸ் வெற்றிக்காகவும் அங்குள்ள முஸ்லிம்களின் நிலைமைகள்சீராகுவதற்காகவும் எம்மால் இயன்ற பயனுள்ள முயற்சிகளைச் செய்வதற்குக்கடமைப்பட்டுள்ளோம். அவற்றில் முக்கியமாக பின்வரும் விடயங்களில் கவனத்தைச் செலுத்துவோம்.
உலகத்தில்நடக்கின்றஅனைத்தும்அல்லாஹ்வின் நாட்டப்படியேநடக்கிறதுஎன்றுநம்பும்; நாம்,எமதுபாவங்களினாலேயேநாம் சோதிக்கப்படுகின்றோம் என்பதையும் நம்புகின்றோம்.
இவ்வார ஜுமுஆவை பாலஸ்தீன் சம்பந்தமாக அமைத்துக்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கதீப்மார்களிடம் வேண்டிக்கொள்கிறது.
யூதர்கள் நபிமார்களின் பரம்பரையிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அல்லாஹ்வுக்கு மாற்றம் செய்து நபிமார்களை கொலை செய்ததன் காரணமாக சபிக்கப்பட்டார்கள்.
மேலும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிஃமத்துக்களும் பறிக்கப்பட்டன.
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட பைத்துல் மக்திஸ் யஹுதிகள், கிறிஸ்தவர்கள் மற்றும் மஜுஸிகள் வசம் கைமாறிமாறி இருந்தது.
இறுதியாக ஹழ்ரத் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் பைத்துல் மக்திஸ் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. நீண்ட காலம் வரை முஸ்லிம்களின் கைவசம் இருந்த பைத்துல் மக்திஸ், முஸ்லிம்களின் கருத்து மோதல்களாலும் மற்றும் பாவங்கள் அதிகரித்தமையாலும், அந்நியர்களின் சூழ்ச்சிகளினாலும் யஹுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. இது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாரிய ஒரு பின்னடைவாகும்.
முஸ்லிம்கள் இதைமீட்டெடுப்பதற்காக தற்போது பல தியாகங்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்;. என்றாலும், அது இதுவரை கைகூடவில்லை. குறிப்பாக பலஸ்தீனில் வாழும் முஸ்லிம்கள் நாளாந்தம் பலஉயிர் இழப்புக்களையும், பொருட் சேதங்களையும், இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஒரு உடல் போன்றவர்களே உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் முஸ்லிம்களுக்குஒருசேதம் அல்லது அழிவு ஏற்பட்டு விட்டால் நாமும் அக்கவலையில் பங்கு எடுக்க வேண்டும்.
இலங்கைவாழ் முஸ்லிம்களாகியநாம் பைத்துல் மக்திஸ் வெற்றிக்காகவும் அங்குள்ள முஸ்லிம்களின் நிலைமைகள்சீராகுவதற்காகவும் எம்மால் இயன்ற பயனுள்ள முயற்சிகளைச் செய்வதற்குக்கடமைப்பட்டுள்ளோம். அவற்றில் முக்கியமாக பின்வரும் விடயங்களில் கவனத்தைச் செலுத்துவோம்.
உலகத்தில்நடக்கின்றஅனைத்தும்அல்லாஹ்வின் நாட்டப்படியேநடக்கிறதுஎன்றுநம்பும்; நாம்,எமதுபாவங்களினாலேயேநாம் சோதிக்கப்படுகின்றோம் என்பதையும் நம்புகின்றோம்.
அல்லாஹ்விடம் எங்களதுபாவங்களுக்காகவும் முழு முஸ்லிம்களின் பாவங்களுக்காகவும் தௌபாச் செய்வோம். மேலும்,அதிகமாகநல்லமல்களைச்செய்துஎமதுநிலைமைகளும் முழு முஸ்லிம்களதுநிலைமைகளும் சீராகுவதற்குஅல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
எமக்குமத்தியில் உள்ளகுரோதங்கள்,பகைமைகள்,வஞ்சகங்கள் பொறாமைபோன்றவற்றைக் களைந்துஒற்றுமையைக் கடைபிடிப்போம்.
அந்நியர்களின் குறிப்பாக யஹுதி நஸாராக்களின் கலாச்சாரங்களைவிட்டும் எம்மைநாம் பாதுகாத்துக் கொள்வோம். இதுகுறித்துஎமதுவாலிபர்களுக்கும் வழிகாட்டுவோம்.
பைத்துல் மக்திஸின் வெற்றிக்காகவும் அங்குள்ள முஸ்லிம்களின் விமோசனத்திற்காகவும் எம்மால் முடியுமானஅளவுகுரல் கொடுப்போம்.
மேலும்,பைத்துல் மக்திஸ் முஸ்லிம்களுக்குரியது, அது யஹுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுஎன்றசிந்தனைரீதியானமாற்றத்தை முஸ்லிம்அல்லாதவர்களிடம் உருவாக்குவதற்காகஎமதுவளங்களைப்பயன்படுத்துவோம்.
பைத்துல் மக்திஸ் மீண்டும் முஸ்லிம்கள் கையில் வரும். உலக முடிவின்போது நிச்சயமாக மஸ்ஜிதுல் அக்ஸாவும், பலஸ்தீன் புனித பூமியும் முஸ்லிம்களின் கைகளுக்கு வந்தே தீரும். இது குறித்தும் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
“முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் செய்து யூதர்கள் கற்களுக்கும் மரங்களுக்கும் பின்னால் மறைந்திருந்து அந்தக் கல்லும் மரமும் முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். வந்து அவனைக் கொன்றுவிடு எனக் கூறும் நாள் வரும் வரை உலகம் அழியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லலிம்)
அதற்கு முன் செய்ய வேண்டிய பிரச்சாரம், இலங்கையில் நிலைகொண்டுள்ள ஷீஆ மதம் பற்றி.
ReplyDeleteஇப்போது வாட்ச்ப்பில் ஷீஆ மதத்தைச் சார்ந்த ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று உலாவி வருகிறது, அதில் பேசப்பட்டவைகள் முட்டாள்தனமானது என பலரும் அறிவார்கள். இருந்தாலும் உலமா சபையே அவர்களோடு இருப்பதாக பேசியுள்ளார். அதற்கு முதலில் பதில் சொல்ல வேண்டும்.
இது சம்பந்தமாக ஏனையவர்கள் பேசுவதைவிட உலமா சபையே பதிலளித்தால் மிக நன்றாக இருக்கும்.. பலஸ்தீன் தொடர்பாகவும் பேசத்தான் வேண்டும், இப்போது கண்முன்னால் இருப்பது சம்பந்தமாகப் பேசுங்கள்.
எல்லாருக்கும் பதில் சொல்ல முடியாது என அலல்சியமாக இருந்துவிடவேண்டாம்.
இவ்வளவு காலம் தேவைப்பட்டுள்ளது இந்த அறிக்கைவிட போன பஸ்ஸுக்கு கைகாட்டும் உலமா சபை அதன் திறமையைக் காட்டியுள்ளது
ReplyDeleteIPO.SL.siya no problem kabor vangi sirk bithath okay Quran had is Donna jumaku pin oru kuttam protest pannuthu ju.pawam kiyamth nalil allaku lanjam koduka try o
ReplyDeleteMakaly nalla yosinga siya kolgil how many madhab enra name il naam amal enru seykirom moulod.katham rathib kabor kodi eatham kootu dua inum list podalam idu namadu nabi sal.seyatha sollatha bithath tholugail 2 matum koracha complete siya enaku pirhu urvahum amal yavom narahil yaruku payam iruku
ReplyDeleteஅறிக்கை நல்லாத்தான் இருக்கி முதல்ல இந்த ஸியா காதியானி மற்றும் காத்தாங்குடிப் பைத்தியம் ரவுப் தொடர்பாக உங்கள் நிலையையும் பள்ளிகளில் பயான் செய்யச் சொல்லுங்களன் அல்லாh உங்களுக்கு நன்மையத் தருவான்
ReplyDeleteபலஸ்தீனர்களை பலஸ்தீனர்களாக வாழ விடுங்கள்.
ReplyDeleteஆகா, என்னா ஒரு ஆலோசனை நிலவன்! இதை நீங்கள் எங்களுக்கு சொல்வதைவிட பாலஸ்தீனர்களை அநியாயமாக கொன்று குவிக்கும் இஸ்ரேல் யூதர்களிடம் சொல்லலாமே!
ReplyDeleteஏனெனில் பாலஸ்தீனர்கள் எங்கள் சகோதரர்கள் என்பதால் நாங்கள் வேதனைப்படுகிறோம், அதற்காக வேண்டியே இறைவனிடம் அவர்களுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகிறோம்... ஆனால் அதையும் செய்யவிடாமல் நீங்கள் தடுக்க நினைப்பதாகவே உங்கள் கருத்து அமைந்துள்ளதே! இது என்ன நியாயமோ?
Jamaldeen, இலங்கையில், இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் தமிழக தமிழர்கள என்ன செய்தார்கள் என்பதை கண்களால் கண்டோம். இங்கே இருந்து கோசங்கள் போட்டார்களே தவிர, ஒரு பயல் கடல் கடந்து படகில் வந்து துப்பாக்கி ஏந்தி இலங்கை இராணுவத்திற்கு எதிராக போராட முன்வரவில்லை.
ReplyDeleteஆனால் கேப்டன் பிரபாகரன் என்றெல்லாம் திரைப்படம் எடுத்து காசு உளைத்துக் கொண்டார்கள்.
பாலஸ்தீன பிரச்சினையை நீங்கள் என்னவோ உங்களின் பிரச்சினை போன்று பேசி உசுப்பெற்றுவீர்கள், அங்கே கொல்லப்படுவது என்னமோ அங்கே உள்ள ஏழை சிறுவர்களும், பெண்களும் தான்.
இதைத்தான் வேண்டாம் என்கின்றேன்.
முடிந்தால் சவூதி தலைமையில் அனைத்து இஸ்லாமிய நாடுகளும், நீங்களும் இணைந்து போரில் குதித்துப் பாருங்கள், அப்பொழுது நான் உங்களுக்கு இதனை சொல்ல மாட்டேன்.
Nilavan Marcus!
ReplyDeleteஎங்களுக்கு எல்லா இஸ்லாமியர்களும் ஒன்றுதான் தமிழர்களுக்கு அந்த பண்பு இல்லாமல் இருப்பதற்காக இஸ்லாமியர் ஒருவர் இஸ்லாமியர் ஒருவருக்காக பேசுவதை குறை கூறவேண்டாம். முடிந்தால் அவர்களுக்கு உங்கள் '' மனித நேயத்தை'' பற்றி சொல்லிக்கொடுங்கள்.
Voice,
ReplyDeleteசும்மா ஒன்றுதான் என்று சொன்னால் போதாது. அங்கே சென்று அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடிக் காட்ட வேண்டும்.
பிறகு, ஷியா, காரிஜி, வஹ்ஹபி, தீஜானி, தரீக்கா, தக்கியா, முஷ்ரிக் என்று பிரிந்து கொண்டு இருக்க கூடாது.... போதுமா. பெரிய அறிவாளி போல..... நெனைப்பு...
ஹலோ நிலவன்,
ReplyDeleteஉங்கள் ஸ்டைலிலேயே நானும் பதிலளிக்க முதலில் எண்ணினேன், இருந்தாலும் "முஸ்லிம்" என்றால் யார்? என ஓரளவு புரியவைக்க முயலும் நான் அதன் விதிமுறைக்கு மாற்றமாக உமக்கு விளக்கம் தருவது முறையல்ல என்பதால், பொறுமையோடு உமது கேள்விகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.
முதலில் பாலஸ்தீன் விடயமாக உங்கள் பின்னூட்டத்துக்கு வருகிறேன்,
நான் உட்பட உலக முஸ்லிம்கள் எல்லோரும் பலஸ்தீனரோடு சேர்ந்து துப்பாக்கி ஏந்தி எங்களது உண்மையான அக்கறையை காட்டுமாறு நீங்கள் நக்கல் விடுவது எங்களுக்கு புரிகிறது...
முதலில் முஸ்லிம்களாகிய நாங்கள் எப்படிப்பட்டவர்கள், எந்தளவு தியாகம் செய்யக்கூடியவர்கள் என்பதை தற்போதுள்ள தமிழ்நாடு, குறிப்பாக சென்னை களநிலவரங்களை தெரிந்து கொண்டால் புரியும். அதாவது தமிழ்நாட்டில் உள்ள உங்களது தமிழ் மக்களுக்கே ("இஸ்லாம் போதிக்கும்") மனிதாபிமானம் என்ற அடிப்படையில் எமது மக்கள் செய்யம் உதவிகள், எடுக்கும் சவால்கள் என்பவற்றை பார்த்தாலே தெரியும், எமது முஸ்லிம் மக்கள் நன்மை செய்வதற்காக எந்தளவு தியாகம் செய்யக் கூடியவர்கள் என்பதை. இதை "குறுகிய" மனப்பான்மை கொண்டவர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும் ஓரளவு மனட்சாட்சியுள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.
அடுத்து, ஒருவருக்கு அநியாயம் நடக்கும்போது, முடிந்தால் கையால் தடுக்கும்படியும் (அதாவது, அதை தடுப்பதற்காக போராடும்படியும்), முடியாவிடால் வாயால் (பேச்சுவார்த்தை, அறிக்கைகள்மூலம்) தடுக்கும்படியும், அதுவும் முடியாவிட்டால் உள்ளத்தினாலாவது தடுக்கும்படியும் (அல்லது அநியாயம் செய்வோரை வெறுக்கும் படியும்) இஸ்லாம் போதிக்கிறதே தவிர நான்காமவனாக (கண்டும் காணாமல்) இருந்துவிடச்சொல்லவில்லை. அதனாலேயே நாங்கள் பாலஸ்தீனர்கள் விடயத்தில் அவர்களுக்காக (அவர்களை மனித குலத்தின் பொது எதிரிகளான, உண்மையான உலக பயங்கரவாதிகளான) இஸ்ரேல் யூதர்களின் காட்டுமிராண்டித்தனமான, மிருகத்தனமான அட்டூழியங்களில் இருந்து பாதுகாக்குமாறு அகில உலகத்தையும், அண்ட சராசரங்களையும், அதன் மீதான உயிரினங்களையும் படைத்து, அதனை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு பரிபாலிக்கும் அதிபதியான, ஒரே இறைவனான, அல்லாஹ்விடம் அவனது அடிமைகளான, மனிதர்களாகிய நாங்கள் மன்றாடி வேண்டுவதோடு, மற்ற சகோதர்களையும் அல்லாஹ்விடம் வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுவே மேலுள்ள கட்டுரையின் நோக்கம். மாறாக, நீங்கள் இங்கே குறிப்பிட்டதுபோல் "உங்கள் நம்பிக்கை நட்சத்திரங்களான" கூத்தாடி நடிகர்கள் போலவோ, பம்மாத்து அரசியல்வாதிகள் போலவோ நாங்கள் நடந்துகொள்பவர்கள் அல்ல.
அடுத்தது, நீங்கள் சவால் விட்டதுபோல் பாலஸ்தீனத்திற்கு போய் நேரடியாக போரிட ஒன்றும் தயங்கக்கூடியவர்கள் அல்ல நாங்கள், ஆனால் அது இப்போதைக்கு (நீங்கள் மறுத்தாலும், நீங்கள் அறிந்து வைத்துள்ளதுபோல்) நடைமுறைச்சாத்தியமானதல்ல. காரணம் என்னவென்பதை புத்தியுள்ள சிறுபிள்ளையும் அறியும். அதோடு எங்கள் நபி முஹம்மத் ஸல்லள்ளாஹ் அவர்கள் ஏற்கனவே (அள்ளாஹ்வின் அறிவிப்பின் பிரகாரம்) எங்களுக்கு இன்றைய காலப்பகுதி (உலக அழிவின் நெருங்கிய காலம்) பற்றி கூறியுள்ளதன் பிரகாரம் எங்கள் ஒற்றுமைக்கான காலம் மிக விரைவில்தான் உள்ளது, ஆனால் இப்போது அல்ல.
இருந்தும் நீங்கள் சவால் விட்டதற்கு காரணம், ஏற்கனவே உங்களைப்போன்ற "மனிதநேயமுள்ள", அநியாயம் செய்யாத, புனித மக்கள், முஸ்லிம்களாகிய எங்களை பொதுவாகவே "பயங்கரவாதிகள்" என மனட்சாட்சியோடு முத்திரை குத்தியுள்ள நிலையில்.. எங்கள் கருத்துக்களை வைத்து நீங்கள் இலகுவாக அதை நியாயப்படுத்த முனைகிறீர்கள், என்பதுதான் என்பதும் எங்களுக்கு புரிகிறது.
இதன் தொடர்ச்சி பின்தொடரும்.....
மேலும், நிலவன் அவர்களே, நீங்கள் சில பெயர்களை (காரீஜ், ஷிஆ, வஹாபி, தரிக்கா, தௌஹீத், என்று) சில பெயர்களை குறிப்பிட்டு எங்களுக்குள் பிளவுகளும், குழப்பங்களும், பிழைகளும் இருப்பதாக சுட்டிக்காட்டி அதன்மூலம் இஸ்லாத்தை கொச்சைப்படுத்த முனைகிறீர்கள் என்பதும் உங்கள் பின்னூட்டம் மூலம் தெரிகிறது. ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள் (நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும், இஸ்லாத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமென விரும்புகின்ற, ஏற்கனவே குறிப்பிட்டிருந்த மற்றவர்களுக்காக கூறுகிறேன்), "இஸ்லாத்தின் வரைவிலக்கணத்தை, வரையறைகளை, அதன் சட்டங்களை, அதன் கொள்கைகளை, ஒரு வட்டத்திற்குள்ளான மிகக்குறுகிய அறிவைக்கொண்ட, கொடுக்கப்பட்ட நீங்களோ, அல்லது நாங்களோ வரையறுக்கவோ, வரைவிலக்கணப்படுத்தவோ, விமர்சிக்கவோ முடியாது. இஸ்லாம் என்பது இறைவனின் மார்க்கம், ஒரு நேர்வழிகாட்டி. அது மற்றவர்கள் உருவாக்கிக்கொண்டதுபோலான "மதமல்ல". எனவே இறைவன் அந்த இஸ்லாத்தில் மிகத்தெளிவாக யார், யார், இஸ்லாத்தில் உள்ளார்கள், யார், யார் முஸ்லிம்கள் என்று அவனே விளக்கியுள்ளான், வரையறுத்துள்ளான். அவ்வாறே யார், யார், இஸ்லாத்திற்கு வெளியில் உள்ளார்கள், யார், யார், இஸ்லாத்தை விட்டு வெளியில் போனவர்கள் என்றும் வரையறுத்துள்ளான்.
ReplyDeleteஅதையே நபி அவர்களும் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
உதாரணமாக,
“ஆனால் உம் இறைவன் மீதும் சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் எற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள். (அல்குர்அன் 4:65)
ஒரு உண்மையான முழு முஸ்லிமாக வாழ்ந்து காட்டிய நபி அவர்கள் முஸ்லிம்கள் பற்றி கூறும்போது..
‘என் வழிமுறையை புறக்கணித்தவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரழி) ஆதாரம்: முஸ்லிம்.
“நான் கொண்டு வந்ததற்கேற்ப தனது மனோ இச்சையை மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
“எவர் மனிதர்களின் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன். எவர் அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரை அல்லாஹ் மனிதர்களின்பால் சாட்டிவிடுகிறான்.” (ஸூனனுத் திர்மிதி)
ஆக அவர்களின் வழியை பின்பற்ற வில்லை என்றால் அவன் முஸ்லிமல்ல. (ஏன் யுத்தம் செய்ய வேண்டும், எவ்வாறு யுத்தம் செய்வது சம்பந்தமாகவும் நபியர்களின் நேர்வழி உள்ளது. (ஆதாரத்திற்கு அல்- குர்ஆனையும், ஹதீஸ்களையும் பார்க்கலாம்). இதன் அடிப்படையிலேயே பல மார்க்க அறிஞர்களாலும் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய விரோத இயக்கம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(இவ்வாறே பல ஆதாரங்களை இங்கே முழுமையாக கொண்டு வந்து காட்டுவதற்கு இது ஒரு போதுமான இடமுமல்ல. நேரமும் இல்லாமல் நான் உள்ளேன். எனவே தான் மிகச்சுருக்கமாக சுட்டிக்காடியுள்ளேன். நிச்சயமாக, ஏனைய சகோதரர்களும் இது சம்பந்தமான ஆதாரங்களை இங்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.)
எனவே, அந்த வரையறைக்கு வெளியே இருந்துகொண்டு தாங்கள் தான் முஸ்லிம்கள் என்று கூறுபவர்களாலோ, அல்லது அவர்களை ஆதரித்து உண்மை முஸ்லிம்களை விமர்சிப்பவர்களாலோ, அல்லது அவர்களும் முஸ்லிம்கள்தான் என்று (முஸ்லிமல்லாத உம்போன்ற ஏனையோர்) தாங்களாகவே தீர்மானித்து விமர்சிப்பதாலோ அவ்வாறானவர்களும் முஸ்லிம்களாகிவிட முடியாது. (உதாரணம், இஸ்லாத்தின் அடிப்படையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் ஒரு இஸ்லாமிய இயக்கமல்ல, மாறாக இஸ்லாத்தை மற்றவர்கள் கொச்சைப்படுத்த வழி ஏற்படுத்தும் ஒரு இஸ்லாமிய விரோத இயக்கம். ஆனால் நிலவன் போன்றோருக்கு அதை இஸ்லாமிய இயக்கமாக காட்டுவதில் அதிக அக்கறையுண்டு).
எனவே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான பின்னூட்டங்கள் மூலம் எங்களை பிரித்துக்காட்டவோ, கொச்சைப்படுத்தவோ முனைந்து நீங்கள் கேலிக்கு உள்ளாகிவிடவேண்டாம்.
நீங்கள் இஸ்லாத்தின் ஆழம் அறியாமல் அதை விமர்சிக்க காலைவிடுவதை விட, உங்கள் ஆழம் குறைந்த கிணற்றை தோண்டப்பாருங்கள். அதன்மூல் சிறு நன்மைகளையாவது நீங்கள் பெறுவதோடு, உங்கள் சமூகத்திற்கும் பயனளிக்கலாம்.
ஒன்றின்மீது பொறாமை, காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் இப்படியிருக்ககூடாது அப்பா.. ஒரு சிறிதளவாவது மனட்சாட்சி இருந்தால்(?) நன்றாயிருக்கும்!.
இதன் தொடர்ச்சி பின்தொடரும்.....
மேலும் எனது சமூகத்தில் உள்ள தங்கள், தங்கள் பிரிவினைகளுக்கு துணைபோய் ஒன்றையொன்று எதிர்த்து விமர்சித்துக்கொண்டிருக்கும் அன்பு சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
ReplyDeleteஇங்கு அள்ளாஹ் எச்சரிக்கும் விடயங்களையும், நபிகளார் எச்சரிக்கும் விடயங்களையும் கவனத்தில் கொண்டு நம்மை ஒற்றுமைப்படுத்துவோம்.
“ இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்- உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் நரக நெருப்புக் குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்- நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.” –அல் குர்ஆன்.3:103.
‘…..இன்னும் இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்….” (அல்குர்ஆன் 5:3)
‘….நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்.” (அல்குர்ஆன் 3:19)
ஏனையோருக்கு தீனி போடாமல் இருப்போம். அவர்கள் எத்தகையோரென்றால்....
" அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான்". (61:8)
“அவர்களுக்கு (மார்க்க விசயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்த பின்னரும் அவர்கள் அபிப்ராயபேதம் கொண்டனர்.”;…. –அல் குர்ஆன்.45:17.
“அவர்கள்,தங்களிடம் (வேத) ஞானம் வந்த பின்னர், தங்களுக்கிடையுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை.”-அல் குர்ஆன்.42:14.
மேலும்.. அறிந்து கொள்வோம் அதன்படி நடப்போம்......
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவருடைய) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.அன்றியும், அவனுக்கு நிகராகவும் ஒன்றுமில்லை. (ஸூரா அல்இக்லாஸ் 112:1-4)
அவ்வாறே பிரார்த்திப்போம்......
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
இத்தகையோர் (தங்கள்) நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதைச் சிந்தித்து எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக… (அல்குர்அன் 3:190,191)
பல தகவல்களை கொண்ட சில இணையத்தளங்களின் தொடர்பை இங்கு இட்டுள்ளேன்,..
http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post_20.html
http://www.readislam.net/portal/archives/87