Header Ads



குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள, எமது பெயர்களை கூறுகின்றனர் - மகிந்த

தவறு செய்த நபர்கள் அதில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக தமது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தமது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாயவே அனைத்தையும் செய்துள்ளார் என சிலர் கூறுகின்றனர். அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் கோத்தபாயவை பிடித்து கொடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு நாமலை பிடித்து கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறு உனக்கு வீட்டுக்கு செல்ல முடியும். அப்படி சென்று வாக்குமூலங்களை எழுதிக்கொடுக்கின்றனர். நீதவான்களிடம் சென்று எமது குடும்பத்தினருக்கு எதிராக எழுதிக்கொடுத்து விட்டு தம்மை பாதுகாத்து கொள்கின்றனர்.

குற்றவாளிகள் தப்பிக்க வேண்டும் என்பதால், எமது பெயர்களை கூறுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. All are your guidance. did you forget that? ask your Gotha.

    ReplyDelete
  2. HALLO SEYVZALLAN SEYTHUVITTU MUZALAI KANNEER VADIKKA VENDAAM

    ReplyDelete
  3. இவருக்கு இப்படி ஒரு மனநோய். ஐயா அவசரமாக நல்ல வைத்தியரை நாடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.