அரசாங்கம் பதவி கவிழ்க்கப்படும், என சிலர் கருதுகின்றனர் - அர்ஜூன
அரசாங்கம் ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தைப் பூர்த்தி செய்யும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
யார் என்ன சொன்னாலும் அரசாங்கம் ஐந்து ஆண்டு ஆட்சிய பூர்த்தி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பதவி கவிழ்க்கப்படும் என சிலர் கருதிய போதிலும் அவ்வாறு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக எவரினாலும் பதவி கவிழ்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடாது எனவும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான போராட்டங்களின் போது உரிய வழிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரசாங்கத்தின் சிலர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யார் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதனை அறிந்து கொள்ளவே இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment