ஆளும் கட்சிக்கு மாறுவதைவிட, சலவை தொழில் செய்யலாம் - டளஸ்
எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு மாறுவதை காட்டிலும் சலவை செய்யும் இடத்தில் தொழில் செய்யலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணையப் போகிறார் என்ற பட்டியலில் டளஸ் அழகப்பெருமவின் பெயரும் பேசப்பட்டது. இந்தநிலையில் அழகப்பெரும, ஆங்கில இதழ் ஒன்றுக்கு தமது கருத்தை வெளியிட்டுள்ளார்
அரசாங்கத்தை முழுமையாக நம்பியே மக்கள் வாக்களித்தனர் எனினும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் முழுமையாக மக்கள் ஏமாற்றும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வரவுசெலவுத்திட்டம் பண்டாரநாயக்க மைத்திரி கொள்கையை அடிப்படையாக கொண்டது அல்ல.
அது முழுமையாக ஜே ஆர்., ரணில் சிந்தனையை உள்ளடக்கியது என்றும் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தை பொறுத்தவரையில் 10 ஆண்டுகள் ஒரு இடத்தில் வசித்தால் அந்த இடம் சொந்தமாகும் என்ற விடயம் மாத்திரம் சிறந்த யோசனையாகும் என்று அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தாங்கள் கேட்ட சலுகை எதையும் நல்லாட்சியாளாள் தரவில்லை போலும். மேலும் தங்களது டீல் மிகப் பொருத்தமானது.நகர்புறமாகப் பார்த்து கடையை திறக்கவும்.
ReplyDeleteஉகந்த தொழில்
ReplyDeleteOrey oru chikkal!Mahindavum Shiranthiyum munbu poanru ippozellam
ReplyDeleteazigam aadai maatraaza padiyaal vaumaanam romba kammiyaaga varum.
paravaayillaiyaa ? paththu varuda anufavamulla tholil thaanne,
summaavaa ?