Header Ads



சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற யெமன் யுத்தத்தை, முடிக்கும் பேச்சு உடன்பாடின்றி முடிவு

யெமன் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எந்தவொரு உடன்பாடும் இன்றி கடந்த ஞாயிறன்று முடிவடைந்துள்ளது.

எனினும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை ஜனவரி 14 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று ஐ.நா. விசேட தூதுவர் இஸ்மயிவ் அவுத் ஷெய்க் குறிப்பிட்டபோதும் குறித்த பேச்சுவார்த்தைக்கான இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இந்த பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டபோதும் யெமனில் அமுலில் இருக்கும் தற்காலிக யுத்த நிறுத்தம் மீறப்பட்ட சம்பவங்கள் பிரச்சினையை ஏற்படுபத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

வடக்கு யெமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் அரச தரப்புக்கும் இடையில் யுத்த நிறுத்தத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து மோதல் நீடிக்கிறது.

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த பெப்ரவரியில் தலைநகர் சனாவை கைப்பற்றியதை அடுத்து ஜனாதிபதி அப்த் ரப்பு மன்சூர் ஹதி அரசு வெளியேற்றப்பட்டது. எனினும் ஹதி அரசுக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையில் பிராந்திய நாடுகள் கடந்த மார்ச்சில் யெமன் மீது வான் தாக்குதல்களை ஆரம்பித்தன.

இந்த மோதல்களில் சுமார் 5,700 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.